This Article is From Apr 19, 2019

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: மாவட்ட வாரியாக தேர்ச்சி விவரம்!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: மாவட்ட வாரியாக தேர்ச்சி விவரம்!

கடந்த ஆண்டில் மே மாதம் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு முன்கூட்டியே வெளியாகியுள்ளது.

2019 மார்ச் மாதம் நடத்தப்பட்ட பொதுத் தேர்வை பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் எழுதினர்.

இதில், 91.3 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் தமிழகத்தில் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 93.64 சதவிகித தேர்ச்சியும், மாணவர்கள் 88.57 சதவிகித தேர்ச்சியும் பெற்றுள்ளனர். இது மாணவர்களை விட 5.07 சதவிகித மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி விகிதத்தைத் பொருத்தவரை திருப்பூர் மாவட்டம் 95.37 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஈரோடு 95.23 சதவீத தேர்ச்சியும், பெரம்பலூர் 95.15 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளது. கோவை 95.01 சதவீதம், நாமக்கல் 94.97 சதவீத தேர்ச்சியுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மாவட்ட வாரியாக தேர்ச்சி விவரம்,

1. திருப்பூர் - 95.37%
2. ஈரோடு - 95.23%
3. பெரம்பலூர் - 95.15%
4. கோயம்புத்தூர் - 95.01%
5. நாமக்கல் - 94.97%
6. கன்னியாகுமாரி - 94.81%
7. விருதுநகர் - 94.44%
8. திருநெல்வேலி - 94.41%
9. தூத்துக்குடி - 94.23%
10. கரூர் - 94.07%
11. சிவகங்கை - 93.81%
12. மதுரை - 93.64%
13..திருச்சிராப்பள்ளி - 93.56%
14. சென்னை - 92.56%
15. தேனி - 92.54%
16. ராமநாதபுரம் - 92.30%
17. புதுச்சேரி - 91.22%
18 தஞ்சாவூர் - 91.05%
19. நீலகிரி - 90.87%
20. திண்டுக்கல் - 90.79%
21. சேலம் - 90.64%
22. புதுக்கோட்டை - 90.01%
23. காஞ்சிபுரம் - 89.90%
24. அரியலூர் - 89.68%
25. தருமபுரி - 89.62%
26. திருவள்ளூர் - 89.49%
27. கடலூர் - 88.45%
28. திருவண்ணாமலை - 88.03%
29. நாகப்பட்டினம் - 87.45%
30. கிருஷ்ணகிரி - 86.79%
31. திருவாரூர் - 86.52%
32. விழுப்பரம் - 85.85
33. வேலூர் - 85.47%
34. காரைக்கால் - 84.47%

பிளஸ் 2 பொதுத்தேர்வில், தமிழகத்தில் 1281 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இதில், அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 84.76 சதவிகதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவ, மாணவிகளில் 92.64% பேர் தேர்ச்சி பெற்று முதலிடத்தில் உள்ளது.
 

.