ப்ளஸ் ஒன் (+1) தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி?

எஸ்.எம்.எஸ். மூலம் முடிவுகளை தெரிந்து கொள்ளும் வசதியை அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ப்ளஸ் ஒன் (+1) தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி?

Tamil Nadu 11th Result: மதிப்பெண் பட்டியல் இணைய தளம் வழியே வெளியிடப்படுகிறது.


+1 Examination Results 2019: ப்ளஸ் ஒன் தேர்வு முடிவுகளை இணையதளம், குறுஞ்செய்தி உள்ளிட்டவற்றின் மூலம் அறிந்து கொள்ள தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் ஏற்பாடு செய்துள்ளது. 

> காலை முதல் 9.30 மணி முதல்....

http://www.tnresults.nic.in/
http://www.dge1.tn.nic.in
http://www.dge2.tn.nic.in

இந்த இணைய தளங்களில் ஒன்றுக்கு சென்று முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

* இந்த இணைய தளங்களில் +1 ரிசல்ட்டுக்கான லிங்க் அங்கு இருக்கும். அதனை க்ளிக் செய்ய வேண்டும். 


* ஓபன் ஆகும் பக்கத்தில் பதிவு எண், மற்ற விவரங்களை குறிப்பிடவேண்டும். 


* இதன்பின்னர் இன்னொரு பக்கத்தில் மதிப்பெண் பட்டியல் வெளியாகும். அதனை டவுண்லோட் செய்து கொள்ளலாம்.

> மாணவர்கள் தங்களது பள்ளிகளில் அளித்த உறுதி மொழி படிவத்தில் மொபைல் எண்ணை குறிப்பிட்டிருப்பார்கள். அந்த எண்ணுக்கு தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ். அனுப்பி வைக்கப்படும்.

சான்றிதழ், ரி-வேல்யூஷன் விவரம்:

 > மதிப்பெண் பட்டியலை முதலில் இணைய தளத்தில் டவுண்லோட் செய்து கொள்ளலாம். இது 14-ம்தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும். 

> அச்சடிக்கப்பட்ட ஒரிஜினல் சான்றிதழ்கள் 14-ம்தேதி செவ்வாய்க் கிழமை மதியத்தில் இருந்து தாங்கள் படித்த பள்ளியில் இருந்து மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். 

>  ஒரிஜினல் PDF சான்றிதழ்களை 16-ம்தேதி பிற்பகல் முதல் www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் டவுண்லோட் செய்து கொள்ளலாம். 

> +1-ல் தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வை எழுதாதவர்களுக்கு ஜூன் 14 முதல் 21-ம்தேதி வரை சிறப்பு தேர்வுகள் நடைபெறுகிறது. இதுகுறித்த விவரம் விரைவில் வெளியாகும்.

>  மாணவர்கள் தங்களது மதிப்பெண்கள் குறைவதாக கருதினாலோ, அல்லது குறிப்பிட்ட பாடத்தில் தோல்வி அடைந்தாலோ அதற்கு மறு கூட்டலுக்கு விண்ணப்பம் செய்வார்கள். இதற்காக வரும் 10,11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் (Revalution) விண்ணப்பம் செய்யலாம். 

>  விடைத்தாள் நகலைப் பெற பாடம் ஒன்றுக்கு ரூ. 275 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

>  ரி-வேல்யூஷனை பொறுத்தளவில் உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூ. 305-ம், மற்ற பாடங்களுக்கு ரூ. 205-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை +1 தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது பள்ளியிலேயே செலுத்தலாம். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................