This Article is From Dec 24, 2019

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் டிச. 27, 30-ல் விடுமுறை!!

விடுமுறை அறிவிப்பு தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் டிச. 27, 30-ல் விடுமுறை!!

டிசம்பர் 27, 30-ல் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள 27 மாவட்டங்களில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய 2 தினங்களில் விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும். வாக்குகள் 2020 ஜனவரி 2-ம்தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. 

இதையொட்டி, டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. 

இதன்படி, அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு விடுமுறை விடப்படுகிறது.

இதேபோன்று, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும். 

.