தமிழக அரசுடன் இணைந்து பணியாற்றிய Nobel பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர்கள்

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, மாநில அரசு பல்வேறு விஷயங்களில் ஆராய்ச்சி செய்யும். இதில் முக்கிய அம்சமாக கொள்கை குறித்த உரையாடல், ஆராய்ச்சி திட்டம் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவை ஆராய்ச்சி செய்யப்படும்.

தமிழக அரசுடன் இணைந்து  பணியாற்றிய Nobel பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர்கள்

இருவரும் தமிழகத்தில் முதியவர்கள் தொடர்பான பிரச்னைகள் குறித்த குழு ஆய்வில் முதன்மை புலனாய்வாளர்களாக இருந்தனர்

பொருளாதார வல்லுநர்களான அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது மனைவி எஸ்தர் டுஃப்லோ ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவது குறித்து தமிழக மாநில நிதிசெயலாளர் எஸ். கிருஷ்ணன் மகிழ்ச்சியினை தெரிவித்தார். 

நோபல் பரிசு குறித்த செய்திக்குப் பிறகு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி தம்பதியினருக்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். பல ஆண்டுகளாக இந்த இருவருடனான தனது தொடர்பை நினைவு கூர்ந்த கிருஷ்ணன், அவர்களுடன் விரிவாக தொடர்பு கொண்டிருந்ததை கூறினார்.  அவர்களுடன் பணியாற்றுவது என்பது எப்போதுமே மிகவும் உத்வேகத்தை கொடுக்கக் கூடியதாக இருக்கும். ஏனெனில் அவர்கள் பல்வேறு பகுதிகளில் பல நுண்ணறிவுகளைக் கொண்டிருந்தார்கள்.

“நாங்கள் 2013 ஆம் ஆண்டில் அபிஜித் பானர்ஜி மற்றும் எஸ்தர் டுஃப்லோவுடன் முறையாக பணியாற்றத் தொடங்கினோம்.  அவர்களுடன் 2014 நவம்பரில் ஜே.பால் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் பணியாற்றினோம். முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் முன்னிலையில் அதை முறைப்படுத்தினோம்” என்று கிருஷ்ணன் தெரிவித்தார். 

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, மாநில அரசு பல்வேறு விஷயங்களில் ஆராய்ச்சி செய்யும். இதில் முக்கிய அம்சமாக கொள்கை குறித்த உரையாடல், ஆராய்ச்சி திட்டம் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவை ஆராய்ச்சி செய்யப்படும்.

“அமெரிக்காவின் வறுமை ஆய்வகத்தின் இயக்குநர்களான அப்துல் லத்தீப் ஜமீல் இருவருடனும் நாங்கள் விரிவாக உரையாடினோம். தமிழக அரசு இதுவரை 2014 முதல் 15 திட்டங்களை அவர்களுடன் செய்துள்ளது.” என்று தெரிவித்தார். 

“ இந்தியாவில் உள்ள வேறு எந்த மாநில அரசாங்கத்தையும் விட அவர்கள் தமிழக அரசுடன் மிக விரிவான ஈடுபாட்டை கொண்டிருந்தனர். இது குறித்து அவர்களின் சொந்த வலைத்தளம் பேசும். தமிழக அரசாங்கத்துடன் பல தொடர்ச்சியான கலந்துரையாடல்களில் இருவரும் கலந்து கொண்டனர்” என்றார். 

முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் இருவரும் தமிழகத்தில் முதியவர்கள் தொடர்பான பிரச்னைகள் குறித்த குழு ஆய்வில் முதன்மை புலனாய்வாளர்களாக இருந்தனர். “ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் அதை முடிப்போம்” என்று கிருஷ்ணன் கூறினார்.

மற்றொரு சுவாரஸ்யமான ஆய்வு, தொற்றுநோயற்ற நோய்களில் உள்ளவர்களின் நடத்தை, முதல் ஆறு மாதங்களில் கர்ப்பிணிப் பெண்களிடையே இரத்த சோகையைக் குறைப்பதற்கும் பிரத்தியேகமான தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிப்பதற்கும் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

உடல் நலம் தவிர இருபள்ளிகளும் முன் பள்ளி திட்டங்களின் கல்வியின் விளைவுகளை மேம்படுத்துவதில் கிருஷ்ணனுடன் இணைந்து பணிபுரிந்தது பயனளித்தது என்று தெரிவித்தார். 

More News