This Article is From Jul 01, 2020

தமிழகத்தில் ஜூலை 31-ம்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு! அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் நடைமுறையில் இருக்கும் முழு ஊரடங்கு, ஜூலை 5ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜூலை 31-ம்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு! அறிவிப்பை வெளியிட்டது  தமிழக அரசு

ஈ பாஸ் முறையிலும் தமிழக அரசு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கை  ஜூலை 31ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு  இன்று  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

புதிய அறிவிப்பின்படி, அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள், நகர்ப்புற வழிபாட்டுத் தலங்களிலும், பெரிய வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களின் வழிபாட்டுக்கான தடை நீடிக்கிறது. 

நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு  போன்ற சுற்றுலா தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களை திறப்பதற்கான தடை நீடிக்கிறது.  இருப்பினு ம் ஆன்லைன் கல்வி முறை தொடரும். 

பெரு நகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு,  மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, காட்டாங்குளத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு ஜூலை 5-ம்தேதி வர நீடிக்கும். 

மெட்ரோ ரயில், மின்சார ரயில் இயக்கத்திற்கான தடை நீடிக்கும். திரையரங்குகள், ஜிம், நீச்சல் குளங்கள், கேளிக்கை கூடங்கள், மக்கள் கூடும் இடங்களை திறப்பதற்கான தடை, மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து  தடை உள்ளிட்டவை நீடிக்கும். 

ஜூலை 5, 12, 19, 26 ஆகிய ஞாயிற்றுக் கிழமைகளில் எந்த வித தளர்வும் இல்லாமல்  தமிழகம்  முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும். 

திருமணம், இறுதி சடங்குகளில் 50  பேருக்கு மேல் பங்கேற்க கூடாது. 

பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதியில் நோய்க் கட்டுப்பாடு பகுதியை தவிர, மற்ற பகுதிகளில்  ஜூலை 6-ம்தேதிக்கு பின்னர் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களில்,  அந்த  நிறுவனமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் 50 சதவீத பணியாளர்கள், அதிகபட்சம் 8/  நபர்களுடன் இயங்கலாம்.  இருப்பினும் வீட்டிலிருந்து பணியாளர்கள் பணிபுரிவதை நிறுவனங்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.

பெரிய மால்களை தவிர்த்து  அனைத்து ஷோரூம்கள், பெரிய கடைகள் போன்றவை 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.

உணவகங்களில் அமர்ந்து  உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுகிறார்கள்.  ஆனால், அங்கு குளிர்சாதன வசதி இருக்க கூடாது. டீக்கடைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.  வாடகை, டாக்ஸி வாகனங்களை ஓட்டுனர் தவிர்த்து 3 பயணிகளை மட்டுமே கொண்டு பயன்படுத்தலாம். 

முடி திருத்தும் நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்கள், குளிர்சாதன வசதியை பயன்படுத்தாமல்,  அரசு தனியாக வழங்கிய நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது. 

மீன் கடைகள், கோழி, இறைச்சி  கடைகள் மற்ற இறைச்சி கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள், சமூக  இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 6.7.2020 முதலும் கீழ்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது:

1. கிராமப்புரங்களில் உள்ள சிறிய திருக்கோயில்கள், அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோயில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவாலயங்களிலும் மட்டும் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும். இத்தகு வழிபாட்டுத்தலங்களில் சமூக இடைவெளி மற்றும் பிற நோய் தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும், கிராமப்பகுதிகளில் உள்ள பெரிய வழிபாட்டுத் தலங்களுக்கும் தற்போதுள்ள நடைமுறைப்படி பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது.

2. தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

3. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், 20 விழுக்காடு பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும்.

4. அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.

5. வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம். மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் இருக்கும் பொருட்டு தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அனுமதிக்கப்பட வேண்டும். இதுவன்றி, கடைகளில், குளிர் சாதன வசதி இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.

6. தேநீர் கடைகள், உணவு விடுதிகள் மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. டாஸ்மாக் உள்ளிட்ட இதர கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம்.

7. உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதன வசதி இருப்பினும், அவை இயக்கப்படக் கூடாது.

8. தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

9. அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும், மின் வணிக நிறுவனங்கள் வழங்க அனுமதிக்கப்படுகிறது.

ஒ. வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்கள் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

10. ஆட்டோக்கள் இரண்டு பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. சைக்கிள் ரிக்ஷாவும் அனுமதிக்கப்படுகிறது.

11. மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள், மற்ற இறைச்சி கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள் சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.

இவ்வாறு  தமிழக  அரசு  பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

.