திருவாரூர் வெடி விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு

மன்னார் குடியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.

திருவாரூர் வெடி விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு

பட்டாசு தயாரிப்பதற்கான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டபோது விபத்து ஏற்பட்டது.

திருவாரூரில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மன்னார்குடியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. பட்டாசு தயாரிப்பதற்கான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்தில் பட்டாசு ஆலையின் உரிமையாளரும் உயிரிழந்தார். வெடி விபத்து மிகுந்த சக்தி மிக்கதாக இருந்தது. சம்பவம் நடந்தபோது அங்கிருந்த கட்டிடங்கள் அதிர்ந்துள்ளன. 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களில் 2 பேருக்கு காயம் சற்று அதிகமாக இருக்கிறது. 

இந்த சம்பவத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது என்று கூறினார். (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
More News