தமிழகத்தில் புதிதாக 3,949 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 86 ஆயிரத்தை தாண்டியது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் மற்றும் டிஸ்சார்ஜ்  அடைந்தவர்களை தவிர்த்து  தற்போது 37 ஆயிரத்து 331 பேர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

தமிழகத்தில் புதிதாக 3,949 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 86 ஆயிரத்தை தாண்டியது

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் இன்று 3,949 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது
  • மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86 ஆயிரத்தை தாண்டியது
  • 37 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்

தமிழகத்தில் இன்று புதிதாக 3,949 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 86 ஆயிரத்து 224 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 2,167 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சென்னையில் 55 ஆயிரத்து 969 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 62 பேர் கொரோனா பாதிப்பால்  உயிரிழந்துள்ளார்கள்.  அவர்களில் 18 பேர் தனியார் மற்றும் 44 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 

இன்று மட்டும் 2,212 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணம் அடைந்துள்ளனர்.  தமிழகத்தில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 749 ஆக அதிகரித்துள்ளது. 

இன்று பாதிக்கப்பட்டவர்களில் 2,379  பேர் ஆண்கள், 1,570 பேர் பெண்கள் ஆவர். 

கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 30  ஆயிரத்து 5 பேரிடம், 30 ஆயிரத்து 39 மாதிரிகள் பெறப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் மற்றும் டிஸ்சார்ஜ்  அடைந்தவர்களை தவிர்த்து  தற்போது 37 ஆயிரத்து 331 பேர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

சென்னையை தவிர்த்து செங்கல்பட்டில் 187,மதுரையில் 290, திருவள்ளூரில் 154, வேலூரில் 144 பேருக்கு கொரோனா பாதிப்பு  இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.