தமிழகம் முழுவதும் இன்று 231 பேருக்கு கொரோனா பாதிப்பு!! 29 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு சீராக அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று 231 பேருக்கு கொரோனா பாதிப்பு!! 29 பேர் டிஸ்சார்ஜ்

சென்னையில் மட்டும் இன்று 174 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று 231 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை இதுவரையில் இல்லாத அளவுக்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இன்று 29 பேர் மட்டுமே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக தற்போது வரை 2,757 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பாக கொரோனா பாதித்தவர்களை விட டிஸ்சார்ஜ் செய்யப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்த நிலையில், இன்று டிஸ்சார்ஜை விட பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. 

சென்னையில் கீழ்ப்பாக்கம் மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு நிரம்பி விட்டதாக இன்று தகவல்கள் வெளியானது. 

சென்னையில் மட்டும் இன்று 174 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் பாதிக்கப்பட்ட 231 பேரில் 158 பேர் ஆண்கள், 72 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை ஆவார். 

இன்று ஒருவர் உள்பட தமிழகத்தில் மொத்தம் 29 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். 

சென்னையை தவிர்த்து அரியலூரில் 18, செங்கல்பட்டில் 5, காஞ்சிபுரத்தில் 13, திருவள்ளூரில் 7, விழுப்புரம், திருப்பூர், ராமநாதபுரம், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் தலா 2, நெல்லை, சேலம், மதுரை, கோவையிலா தலா ஒருவருக்கு இன்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டலத்தில் 12 மாவட்டங்களும், மிதமான பாதிப்பு உள்ள ஆரஞ்சு மண்டலத்தில் 24 மாவட்டங்களும், பாதிப்பே இல்லாத பச்சை மண்டலத்தில் கிருஷ்ணகிரி மாவட்டமும் உள்ளன. 

ஒட்டுமொத்தமாக 1,341 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 1,384 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.