கொரோனா பாதிப்பில் இதுவரையில்லாத உச்சம்! ஒரேநாளில் தமிழகத்தில் 4,343 பேருக்கு பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,095 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். தமிழகத்தில் குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 56,021 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இதுவரையில்லாத உச்சம்! ஒரேநாளில் தமிழகத்தில் 4,343 பேருக்கு பாதிப்பு

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குணம் அடைந்தவர்களை தவிர்த்து தமிழகத்தில் தற்போது 41,047 பேர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஹைலைட்ஸ்

  • இதுவரையில்லாத அளவுக்கு ஒரேநாளில் தமிழகத்தில் 4,343 பேருக்கு பாதிப்பு
  • சென்னையில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து 2 ஆயிரத்தை தாண்டுகிறது
  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து 56 ஆயிரம்பேர் குணம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரையில்லாத அளவுக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. இன்று மட்டும் 4,343 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 

திடீர் உயர்வால், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 98,392 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 33,488 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. 

இன்று பாதிப்பு ஏற்பட்ட 4,343 பேரில் 2,551 பேர் ஆண்கள், 1,792 பேர் பெண்கள் ஆவர். மொத்த பாதிப்பில் 60,395 பேர் ஆண்கள், 37,975 பேர் பெண்கள் மற்றும் 22 பேர் திருநங்கைகளாக உள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குணம் அடைந்தவர்களை தவிர்த்து தமிழகத்தில் தற்போது 41,047 பேர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,095 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். தமிழகத்தில் குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 56,021 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்புகளை கண்டறிவதற்காக தமிழகத்தில் தற்போது 48 அரசு மற்றும், 43 தனியார் என மொத்தம் 91 ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. 

இன்று மட்டும் 57 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்கள். அவர்களில் 20 பேர் தனியார் மற்றும் 37 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆவர்.

சென்னையில் மட்டும் இன்று 2,027 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து செங்கல்பட்டில் 171 பேரக்கும், கள்ளக்குறிச்சியில் 133 பேருக்கும், மதுரையில் 273 பேருக்கும், ராணிப்பேட்டையில் 127 பேருக்கும், திருவள்ளூரில் 164 பேருக்கும், திருவண்ணாமலையில் 167 பேருக்கும், வேலூரில் 137 பேருக்கும் கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.