தமிழகத்தில் இன்று 3,882 பேருக்கு கொரோனா! சென்னையில் மட்டும் 2,182 பேர் பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் 63 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்கள். அவர்களில் 26 பேர் தனியார் மருத்துவமனையிலும், 37 பேர் அரசு  மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 

தமிழகத்தில்  இன்று 3,882 பேருக்கு கொரோனா! சென்னையில் மட்டும் 2,182 பேர் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,264 ஆக உயர்ந்துள்ளது. 

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் இன்று 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • சென்னையில் மட்டும் இன்று 2,182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • கடந்த 24 மணி நேரத்தில் 63 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்கள்.

தமிழகத்தில் இன்று 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 2,182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த தமிழக அளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 94,049  ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 31 ஆயிரத்து 521 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 

இன்று பாதிக்கப்பட்டவர்களில் 2,342 பேர் ஆண்கள், 1,539 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை ஆவார்.

கொரோனா பாதிப்பை கண்டறிவதற்காக தமிழகம் முழுவதும் 48 அரசு மற்றும் 43 தனியார் என மொத்தம் 91 ஆய்வகங்கள் செயல்பட்டு வருகிறது. 

கடந்த 24 மணி நேரத்தில் 63 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்கள். அவர்களில் 26 பேர் தனியார் மருத்துவமனையிலும், 37 பேர் அரசு  மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,264 ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையை தவிர்த்து இன்று செங்கல்பட்டில் 226 பேரும், மதுரையில் 297 பேரும், சேலத்தில் 162 பேரும், திருவள்ளூரில் 147 பேரும் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.