தமிழகத்தில் இன்று புதிதாக 1,244 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது

கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 610 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.  நோய் பாதிப்பு குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 316 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று புதிதாக 1,244 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு  25 ஆயிரத்தை தாண்டியது

இன்று மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 208 ஆக உயர்ந்திருக்கிறது. 

தமிழகத்தில் இன்று புதிதாக 1,244 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 ஆயிரத்து 872 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 14,101 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இதற்காக 44 அரசு மற்றும் 29 தனியார் ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இன்று பாதிக்கப்பட்டவர்களில் 787 பேர் ஆண்கள், 498 பேர் பெண்கள் மற்றும் ஒருவர் திருநங்கை ஆவார். 

கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 610 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.  நோய் பாதிப்பு குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 316 ஆக அதிகரித்துள்ளது. 

இன்று மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 208 ஆக உயர்ந்திருக்கிறது. 

பலியானவர்கள், சிகிச்சை  குணம் அடைந்து வீடு திரும்பியவர்களை தவிர்த்து தற்போது 11 ஆயிரத்து 345 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர். 

சென்னையில் மட்டும் உச்சபட்சமாக இன்று ஒரே நாளில்  மட்டும் 1,012 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில்  நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.