This Article is From Jul 03, 2020

தமிழகத்தில் இன்று 4,329 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது

கடந்த 24 மணி நேரத்தில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 22 பேர் தனியார் மற்றும் 42 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 1,385 பேர் கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 4,329 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது

இன்று மட்டும் 2,357 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு டிஸ் சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 58,378 பேர் குணம் பெற்றுள்ளார்கள்.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் இன்று 4,329 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
  • மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது
  • சென்னையில் தொடர்ந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

தமிழகத்தில் இன்று 4,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 35,028 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரையில் 12 லட்சத்து 13 ஆயிரத்து 891 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இன்று பாதிக்கப்பட்டவர்களில் 2,621 பேர் ஆண்கள், 1,708 பேர் பெண்கள் ஆவார்கள்.

மொத்த பாதிப்பில் 63,016 பேர் ஆண்கள், 39,683 பேர் பெண்கள், 22 பேர் திருநங்கைகள் ஆவர். 

இன்று மட்டும் 2,357 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு டிஸ் சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 58,378 பேர் குணம் பெற்றுள்ளார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 22 பேர் தனியார் மற்றும் 42 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 1,385 பேர் கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 2,082 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் 121, மதுரையில் 287, தேனியில் 128, திருவள்ளூரில் 172 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

.