தமிழகத்தில் இன்று புதிதாக 1,112 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 23 ஆயிரத்தை தாண்டியது

இன்றைய ஒட்டுமொத்த பாதிப்பில் சென்னையில் மட்டும் 964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 48 பேருக்கும், திருவள்ளூரில் 33 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் இன்று புதிதாக 1,112 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 23 ஆயிரத்தை தாண்டியது

கடந்த 24 மணி நேரத்தில் 413 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 13,170 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தமிழகத்தில் இன்று மட்டும் 1,112 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ஏற்பட்ட உச்சபட்ச பாதிப்பு ஆகும்.

மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 23 ஆயிரத்து 495 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று பாதிப்பு ஏற்பட்டவர்களில் 685 பேர் ஆண்கள், 473 பேர் பெண்கள் மற்றும் 4 பேர் திருநங்கைகள் ஆவார்கள். 

இன்றைய ஒட்டுமொத்த பாதிப்பில் சென்னையில் மட்டும் 964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 48 பேருக்கும், திருவள்ளூரில் 33 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11,377 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 

இன்று மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை184 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் 43 அரசு மற்றும் 29 தனியார் என மொத்தம் 72 ஆய்வகங்கள் கொரோனா பாதிப்பை கண்டறிய செயல்பட்டு வருகின்றன. 

கடந்த 24 மணி நேரத்தில் 413 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 13,170 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

கொரோனா தடுப்பு வார்டுகளில் மொத்தம் 7,097 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விவரங்களை மாநில சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.