கிரிக்கெட் விளையாட்டின்போது தகராறு! 10-ம் வகுப்பு மாணவர் குத்திக் கொலை!!

கொலை செய்த சிறுவர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டார். அவரை சிறுவர் சீர் திருத்தப்பள்ளிக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.

கிரிக்கெட் விளையாட்டின்போது தகராறு! 10-ம் வகுப்பு மாணவர் குத்திக் கொலை!!

சிறுவனின் உயிர் மருத்துவமனையில் பிரிந்தது.

Dindigul, Tamil Nadu:

திண்டுக்கல்லில் கிரிக்கெட் விளையாட்டின்போது ஏற்பட்ட தகராறால் 10-ம் வகுப்பு மாணவர் ஒருவர் சக மாணவரால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பள்ளி மைதானத்தில் திங்களன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு ஏற்பட்ட தகராறில் ஓசூரை சேர்ந்த மாணவர் கபில் ராகவேந்திராவை சக மாணவர் கத்தரிக்கோலால் குத்தினார். 

இதில் படுகாயம் அடைந்த ராகவேந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது உயிர் சிகிச்சை பலனின்றி பிரிந்தது.

இதற்கிடையே குற்றச் செயலில் ஈடுபட்ட சிறுவனை போலீசார் கைது செய்தனர். விசாரணையின் போது அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். 

திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சேலம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்ப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.