வீர மரணம் அடைந்த சி.ஆர்.பி.எப். வீரர் சேகரின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி!!

தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையின்போது உயிரிழந்த தென்காசியை சேர்ந்த சந்திர சேகரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

வீர மரணம் அடைந்த சி.ஆர்.பி.எப். வீரர் சேகரின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி!!

அரசு மரியாதையுடன் சந்திர சேகரின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

ஹைலைட்ஸ்

  • ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரில் ரிசர்வ் போலீஸ் வீரர் சேகர் மரணம்
  • சந்திர சேகர் தென்காசி மாவட்டம் மூன்று வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர்
  • சந்திர சேகர் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் உடனான சண்டையின்போது வீர மரணம் அடைந்த தமிழக வீரர் சந்திர சேகரின் குடும்பத்தினருக்கு ரூ. 20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் துணை ராணுவ படையினர் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது, அவர்களைக் கண்ட தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இருதரப்புக்கும் இடையே நடந்த சண்டையில் 3 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வீர மரணம் அடைந்த ரிசர்வ் போலீஸ் வீரர்களில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள மூன்றுவாய்க்கால் பகுதியை சேர்ந்த சந்திர சேகரும் ஒருவர். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்திருந்தார்.

தற்போது முதல்வர் தரப்பிலிருந்து நிவாரண உதவி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

நாட்டை காக்கும் பாதுகாப்பு பணியில் தனது இன்னுயிரை தியாகம் செய்த திரு.சந்திரசேகர் அவர்களின் குடும்பத்தினை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், உடனடியாக ரூ.20 லட்சம் மற்றும் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். 

இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.