This Article is From Oct 23, 2019

நாங்குநேரி, விக்கிரவாண்டி, காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!!

தமிழகத்தில் 2 மற்றும் புதுவையின் காமரஜ் நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி, காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!!

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வசமும், விக்கிரவாண்டி தொகுதி திமுக வசமும் இருந்தன.

தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுவையின் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவுபெற்றுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 24-ம்தேதி எண்ணப்படுகின்றன. 

தமிழகத்தில் 2 மற்றும் புதுவையின் காமரஜ் நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. 

வாக்குப்பதிவையொட்டி நாங்குநேரி தொகுதியில் 299 வாக்குச்சாவடிகளும், விக்கிரவாண்டி தொகுதியில் 275 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டன.

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வசமும், விக்கிரவாண்டி தொகுதி திமுக வசமும் இருந்தன.

நாங்குநேரியை பொறுத்தளவில் காங்கிரஸ் சார்பாக ரூபி மனோகரன், அதிமுக தரப்பில் ரெட்டியார்பட்டி நாராயணன், நாம் தமிழர் கட்சி சார்பாக ராஜ நாராயணன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பாக புகழேந்தி, அதிமுக தரப்பில் முத்தமிழ்ச்செல்வன், நாம்தமிழர் கட்சியின் வேட்பாளராக கந்தசாமி உள்ளிட்டோர் களம் காணுகின்றனர்.

இந்த நிலையில் இன்று வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. இன்று பதிவான வாக்குகள் 24-ம்தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

.