This Article is From Sep 21, 2019

''இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் திங்களன்று நேர்காணல்'' - அதிமுக

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21-ம்தேதி நடைபெறவுள்ளது.

''இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் திங்களன்று நேர்காணல்'' - அதிமுக

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம், திங்களன்று நேர்காணல் நடைபெறும் என்று அதிமுக அறிவித்துள்ளது. 

இந்த இரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 21-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போடடியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அதிமுக தெரிவித்துள்ளது. 

நாளை மறுதினமான திங்களன்று மதியம் 3 மணி வரையில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். விருப்பம் தெரிவித்தவர்களுக்கான நேர்காணல் அன்றைய தினம் மதியம் 3.30-க்கு நடைபெறவுள்ளது. இந்த தகவலை அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். 

இதற்கிடையே நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டியில் தேர்தல் நடத்த மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருப்பதாக நெல்லை மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். 

நாங்குநேரியில் 2.56 லட்சம் வாக்காளர்களும், 299 வாக்குச்சாவடிகளும் உள்ளன. விக்கிரவாண்டியில் மொத்தம் உள்ள 275 வாக்குச் சாவடியில் 2.23 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 

.