''தமிழகம், புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்'' - வானிலை ஆய்வு மையம் தகவல்!

காவிரி டெல்டா மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு அதிக வாய்ப்புள்ளது.

''தமிழகம், புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்'' - வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னையில் ஓரிரு பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை நிலவரம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல துணைத்தலைவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- 

தற்போது தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அடுத்து வரும் 2 தினங்களைப் பொறுத்தளவில் தமிழகம் மற்றும் புதுவையின் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். 

ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புற நகரங்களில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும். 

கனமழையை பொறுத்தளவில் கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 
இவ்வாறு அவர் தெரிவித்தார். 


மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் சூறைக் காற்று வீசி வருகிறது. இதனால் கேரளா மற்றும் கர்நாடக மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். 
 

More News