தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் 18 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை!!

சென்னை, நாமக்கல், நெல்லை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் 18 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை!!

கைப்பற்றப்பட்ட தொகை வாக்காளர்களுக்கு அளிக்க வேண்டிய பணம் என சந்தேகம் எழுந்துள்ளது.

Chennai:

தேர்தலுக்கு இன்னம் சில நாட்களே உள்ள நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழகத்தில் 18 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். வாக்காளர்களுக்கு அளிக்க பணம் பதுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. 

சென்னை, நாமக்கல், திருநெல்வேலில் ஆகிய மாவட்டங்களில் 18 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

பி.எஸ்.கே. கன்ஸ்ட்ரக்ச்ன் கம்பெனிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இங்கு கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Newsbeep

இதேபோன்று சென்னையில் 10 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திருநெல்வேலியில் ஒரு இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

தமிழகத்தில் தேர்தல் அடுத்த வாரம் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகளை தேர்தல் ஆணையம் தீவிரவமாக கடைபிடித்து வருகிறது. ஏப்ரல் 18-ம்தேதி மொத்தம் உள்ள 39 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முடிவுகள் மே 23-ம்தேதி அறிவிக்கப்படுகின்றன.