‘அதிமுக அரசு அடிமை அரசு அல்ல; எதிர்க்க வேண்டியதை எதிர்ப்போம்’ – ஸ்டாலினுக்கு முதல்வர் பதிலடி

தமிழகத்தை ஆளும் அதிமுக அரசை மத்திய பாஜகவின் அடிமை அரசு என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார் தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி.

‘அதிமுக அரசு அடிமை அரசு அல்ல; எதிர்க்க வேண்டியதை எதிர்ப்போம்’ – ஸ்டாலினுக்கு முதல்வர் பதிலடி

எல்லா மொழிகளும் சமமானவை என்று முதல்வர் பேசினார்.

அதிமுக அரசு அடிமை அரசு அல்ல என்றும், எதிர்க்க வேண்டிய நேரத்தில் மத்திய அரசை எதிர்ப்போம் என்றும் தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழகத்தை ஆளும் அதிமுக அரசை மத்திய பாஜகவின் அடிமை அரசு என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார் தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி.

மொழிப் போர் தியாகிகளுக்கான நினைவுப் பொதுக்கூட்டம் சென்னையில் அதிமுக சார்பாக  நடைபெற்றது. இதில் தமிழக முதல்வரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது-

அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசு பாஜகவின் அடிமை அரசு என்று செல்லும் இடமெல்லாம் ஸ்டாலின் சொல்லி வருகிறார். அப்படியல்ல. எதை எதிர்க்க வேண்டுமோ அதை எதிர்ப்போம். மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய திட்டம் எதுவாக இருந்தாலும் அதனை ஆதரிப்போம்.

திமுகவைப் போல கண்மூடித்தமான ஆதரிக்க கூடிய அரசு அதிமுக அரசு அல்ல. மத்தியிலே 13 ஆண்டுகாலம் திமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. அதனால் என்ன நன்மை இந்த தமிழ்நாட்டிற்கு கிடைத்தது?.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

More News