ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 6 உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது தமிழக அரசு!!

பால் கொள்முதல் விலையும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பசும்பால் கொள்முதல் விலை ரூ. 4, எருமைப்பால் கொள்முதல் விலை ரூ. 6 உயர்த்தப்பட்டுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 6 உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது தமிழக அரசு!!

உயர்த்தப்பட்ட விலை நாளை மறுதினம் முதல் அமலுக்கு வருகிறது.


ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 6 உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதேபோன்று பால் கொள்முதல் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை மறுதினம் முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மக்களின் அன்றாட, அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாட்டுப்பால் இருந்து வருகிறது. பச்சிளம் குழந்தைகள் முதல், நோயாளிகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் ஏதோ வகையில் பாலை அருந்துகின்றனர். 

கிராமப்புறங்களில் மக்கள் தனி நபர்களிடம் பாலை வாங்கி சமாளித்தாலும், நகர மக்கள் தமிழக அரசுடைய ஆவின் பாலைத்தான் பெருமளவு நம்பியிருக்கின்றனர். இந்த நிலையில், பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 6 உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

முன்னதாக மாடுகளை பராமரிப்பதற்கு தேவைப்படும் தீவனங்கள் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்து விட்டது. எனவே கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது.

பால் கொள்முதல் விலையை பொருத்தளவில் எருமைப்பால் லிட்டருக்கு 6 உயர்த்தப்பட்டு ரூ. 41-க்கும், பசும்பால் ரூ. 4 உயர்த்தப்பட்டு ரூ. 32-க்கும் கொள்முதல் செய்யப்படும்சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................