This Article is From Jun 15, 2019

எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார் : மளிகை கடைக்காரர் செல்வம் கைது

ஜெயமோகன் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையி சிகிச்சைக்காக சேர்ந்தார். ஜெயமோகன் அளித்த புகாரின் பேரில் நேசமணிநகர் போலீஸார் கடைக்காரர் செல்வத்தை கைது செய்துள்ளனர்.

எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார் : மளிகை கடைக்காரர் செல்வம் கைது

எழுத்தாளர் ஜெயமோகன் மளிகைக்கடைக்காரர் ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவம் உண்மைதான் என்று  தனது இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளார். புளித்த மாவை திருப்பி கொடுக்கச் சென்ற இடத்தில் கடைக்காரரால் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். 

என்ன நடந்தது? 

எழுத்தாளர் ஜெயமோகன் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் எனும் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று இரவு வீட்டின் அருகே உள்ள மளிகைக் கடையில் இட்லி மாவு வாங்கி சென்றுள்ளார். 

வீட்டில் சென்று மாவு பாக்கெட்டை பார்த்த போது அது மிகவும் புளித்து போய் இருந்துள்ளது. இதையடுத்து தோசை மாவை அதே கடையில் திருப்பிக் ககொடுத்துள்ளார். 

அப்போது தோசை மாவு விற்பனை செய்த பெண்ணின் கணவர் செல்வம், ஜெயமோகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி அவரைத் தாக்கியுள்ளனர். 

பின்னர் ஜெயமோகன் அங்கிருந்து வீட்டிற்குச் சென்று விட்டார். ஆனால்,  கடைக்காரர் செல்வம் தொடர்ந்து வீட்டுக்கு சென்று வாசலில் நின்று ஜெயமோகனை தவறான வார்த்தைகளால் திட்டி ஜெயமோகனின் மனைவி மற்றும் மகளையும் மிரட்டியுள்ளார். 

இதைத் தொடர்ந்து எழுத்தாளர் ஜெயமோகன் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையி சிகிச்சைக்காக சேர்ந்தார். ஜெயமோகன் அளித்த புகாரின் பேரில் நேசமணிநகர் போலீஸார் கடைக்காரர் செல்வத்தை கைது செய்துள்ளனர்.

.