குழந்தையை எரித்து தனக்கும் தீ வைத்துக் கொண்ட தாய்… ஈரோட்டில் பகீர் சம்பவம்!

ஈரோடு மாநிலம், தூக்கநாயக்கன் பாளையத்தில் 25 வயது தாய், தன் குழந்தையை எரித்து தனக்கும் தீ வைத்துக் கொண்டுள்ளார் என்று காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது

குழந்தையை எரித்து தனக்கும் தீ வைத்துக் கொண்ட தாய்… ஈரோட்டில் பகீர் சம்பவம்!
Erode:

ஈரோடு மாநிலம், தூக்கநாயக்கன் பாளையத்தில் 25 வயது தாய், தன் குழந்தையை எரித்து தனக்கும் தீ வைத்துக் கொண்டுள்ளார் என்று காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. 

தேன்மொழி என்கின்ற அந்தப் பெண், குழந்தையைப் பெற்றெடுத்ததில் இருந்து தூக்கநாயக்கன் பாளையத்தில் உள்ள தனது பெற்றோரின் வீட்டில் தங்கி வந்துள்ளார். 

இந்நிலையில் தீடிரென்று மண்ணெண்ணெயை ஊற்றி தன் குழந்தையை எரித்துள்ளார். தனக்கும் அவர் தீ வைத்துக் கொண்டுள்ளார். சிறிது நேரத்தில் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் பக்கத்து அறையில் இருந்தவர்கள் தேன்மொழி மற்றும் அவரது குழந்தை இருந்த அறைக்கு ஓடி வந்துள்ளனர். அப்போது, இருவரும் தீப்பிடித்து எரிவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், தீயை அணைத்தனர். தாய் மற்றும் குழந்தையை அருகில் இருந்த மருத்துவமனைக்கு குடும்பத்தினர் கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால், இருவரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். 

தேன்மொழியின் இந்த அதிர்ச்சியளிக்கும் நடவடிக்கைக்கு என்னக் காரணம் என்பது குறித்து காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது. 

Listen to the latest songs, only on JioSaavn.com