This Article is From Jul 25, 2018

சூழல் பாதுகாப்பிற்கான விஷன் 2023 திட்டத்தில் முக்கிய அம்சங்கள் சேர்ப்பு - தமிழக அரசு

மாநிலத்தின் சுற்றப்புற சூழலை பாதுகாக்கும் முக்கிய அம்சங்கள் கொண்ட அறிக்கையை தமிழக அரசு இன்று வெளியிட்டது

சூழல் பாதுகாப்பிற்கான விஷன் 2023 திட்டத்தில் முக்கிய அம்சங்கள் சேர்ப்பு - தமிழக அரசு
Chennai:

சென்னை: மாநிலத்தின் சுற்றப்புற சூழலை பாதுகாக்கும் முக்கிய அம்சங்கள் கொண்ட அறிக்கையை தமிழக அரசு இன்று வெளியிட்டது

கடந்த 2014 ஆம் ஆண்டு, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட விஷன் 2013 அறிக்கையில், சுற்றுப்புற சூழல் பாதுகாப்பது  முக்கிய அம்சமாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த அறிக்கையில், மாநிலத்தில் உள்ள வனப்பகுதிகள், நீர்நிலைகள், ஆகியவற்றை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்ற கொள்கைகள் கொண்டிருந்தது. 

தற்போது, புதுப்பிக்கப்பட்ட கொள்கைகளில்  வன விலங்குகளை பாதுகாப்பது, அழிந்து வரும் காடுகளை மீட்டெடுப்பது, கடலோர சுற்றுச்சூழல் பகுதிகளை பாதுகாப்பது போன்ற முக்கிய அம்சங்களை சேர்த்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்

தமிழ்நாட்டில் உள்ள 30.92% வனப்பகுதிகள், ‘பாதுகாப்பான இடங்கள்’ என்ற வறையறைக்குள் உள்ளது. மேலும் 15 வனவிலங்குகள் சரணாலயங்கள், 5 தேசிய பூங்காக்கள், 15 பறவைகள் சரணாலயங்கள், 3 உயிர்க்கோளக் காப்பகங்கள், 4 புலிகள் சரணாலயங்கள் உள்ளன. மாநிலத்தில் உள்ள 21.76% வனப்பகுதியினை 2030 ஆம் ஆண்டிற்க்குள் 33% ஆக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

.