This Article is From Apr 22, 2019

’10 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு தேவை!’- சத்யபிரதா சாஹு அதிரடி

கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி, தமிழகத்தில் 38 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடந்தன.

’10 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு தேவை!’- சத்யபிரதா சாஹு அதிரடி

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, மாநிலத்தில் இருகுகம் 10 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு தேவை என்று தேர்தல் ஆணையத்துக்குப் பரிந்துரை செய்துள்ளார்

Chennai:

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, மாநிலத்தில் இருகுகம் 10 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு தேவை என்று தேர்தல் ஆணையத்துக்குப் பரிந்துரை செய்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர் இத்தகவலை தெரிவித்துள்ளார். 

தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் அளித்த புகார்களை அளித்து மறு வாக்குப்பதிவு கோரி தேர்தல் ஆணையத்துக்குப் பரிந்துரை செய்துள்ளதாக சாஹு கூறியுள்ளார். 

‘தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 8 வாக்குச்சாவடிகளிலும், திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 1 வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு நடத்தப் பரிந்துரை செய்துள்ளேன். அதேபோல, கடலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு கோரியுள்ளேன்' என்று கூறியுள்ளார் சாஹு.

கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி, தமிழகத்தில் 38 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடந்தன. அப்போது தர்மபுரி, கடலூர் உள்ளிட்ட சில இடங்களில் வாக்குப்பதிவில் குளறுபடி நடந்ததாக கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து பல தரப்பினரும் குறிப்பிட்ட சில வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு கோரி வந்தனர். இதைத் தொடர்ந்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அது குறித்து எடுத்த நடவடிக்கைப் பற்றி பேசியுள்ளார். 


 

.