டெட் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது! எப்படி பதிவிறக்கம் செய்வது?..

டெட் தேர்விற்கான ஹால் டிக்கெட்டை trb.tn.nic.in. இணையதளத்தில் பெறலாம்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
டெட் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது! எப்படி பதிவிறக்கம் செய்வது?..

டெட் ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?..


New Delhi: 

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  Download Admit Card. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வானது, (TNTET) வரும் ஜூன் மாதம் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TNTRB) நடத்தும் இந்த தேர்வு இரண்டு தாள்களாக நடக்கிறது. முதல் தாள் தேர்வு ஜூன் 8ஆம் தேதியும், இரண்டாம் தாள் தேர்வு ஜூன் 9ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் 60 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெறுபவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த சான்றிதழானது, 7 வருடங்களுக்கு செல்லுபடியாகும்.

இரண்டு தாள்களை கொண்ட இந்த தேர்வில், ஒவ்வொறு தேர்வும் 150 மதிப்பெண்களை கொண்டிருக்கும்..

முதல் தாளில், குழந்தை மேம்பாடு மற்றும் கற்பிக்கும் முறை, தமிழ்/தெலுங்கு/மலையாளம்/கன்னடம்/உருது, ஆங்கிலம், கணக்கு மற்றும் சுற்றுச்சூழல் கல்வி குறித்த கேள்விகள் இடம்பெறும், இரண்டாவது தாளில் குழந்தை மேம்பாடு மற்றும் கற்பிக்கும் முறைகள், தமிழ்/தெலுங்கு/மலையாளம்/கன்னடம்/உருது, ஆங்கிலம், கணக்கு மற்றும் அறிவியல் (கணக்கு ஆசிரியர்), சமூக அறிவியல் (சமூக அறிவியல் ஆசிரியர்) குறித்த கேள்விகள் இடம்பெறும். 

கணக்கு மற்றும் சமூக அறிவியல் பாடங்களை தவிர மற்ற பாடங்களுக்கான ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இரண்டவாது தாளில், கணக்கு மற்றும் அறிவியல் அல்லது சமூக அறிவியல் பாடத்தை தேர்வு செய்ய வேண்டும். 

கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான சான்றிதழ்கள் ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்டது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................