பெற்றோரிடம் புகார் தெரிவித்த வார்டனை குத்திக் கொன்ற பொறியியல் மாணவர் கைது

புகாருக்கு பின் பெற்றோர்கள் மாணவனை திட்டியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவன் வார்டன் வெங்கட் ராமனை கழுத்திலும் இடுப்பிலும் கத்தியால் குத்தியுள்ளார்.

பெற்றோரிடம் புகார் தெரிவித்த வார்டனை குத்திக் கொன்ற பொறியியல் மாணவர் கைது

கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் அப்துல் ஹக்கீம் என்ற மாணவர் இச்செயலை செய்துள்ளார் (Representational)

Tiruchirappalli:

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி விடுதி வார்டனை பொறியியல் மாணவர் கொலை செய்தார். 

கண்ணனூரில் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் அப்துல் ஹக்கீம் என்ற மாணவரைப் பற்றி வார்டன் வெங்கட் ராமன் (45) பெற்றோரிடம் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

புகாருக்கு பின் பெற்றோர்கள் மாணவனை திட்டியுள்ளனர். 
இதனால் ஆத்திரம் அடைந்த  மாணவன் வார்டன் வெங்கட் ராமனை கழுத்திலும் இடுப்பிலும் கத்தியால் குத்தியுள்ளார். காயமடைந்த வெங்கட்ராமனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதையடுத்து மாணவன் அப்துல் ஹக்கீமை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

Click for more trending news


More News