This Article is From Jul 09, 2020

30 ஆண்டுகளாக தினமும் 15 கி.மீ நடந்தே சென்று தபால் கொடுத்த போஸ்ட்மேன்- நெகிழ்ச்சிக் கதை!

சிவனின் அர்பணிப்புகளை பாராட்டியும், அவரின் சேவை விருதுடன் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் தங்கள் கருத்துகளை பலர் டிவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

30 ஆண்டுகளாக தினமும் 15 கி.மீ நடந்தே சென்று தபால் கொடுத்த போஸ்ட்மேன்-  நெகிழ்ச்சிக் கதை!

சிவன் என்கிற தபால்காரர் குன்னூரில் 30 ஆண்டுகளாக கடிதங்களை உரியவர்களிடம் கொண்டு சேர்க்க அடர் வனத்தில் 15 கி.மீ தினமும் பயணிக்கின்றார்.

அரசு ஊழியர்கள் என்றால் நிதானமும், பொறுமையும், மந்த நிலையான செயல்பாடுகள் என்கிற பொது சிந்தனைக்கு மத்தியில் தமிழகத்தில் தாபல்காரர் ஒருவர் கடிதங்களை உரிய இடத்தில் கொண்டு சேர்க்க தினமும் ஏறத்தாழ 15 கி.மீ அடர்ந்த காடுகளுக்குள் பயணிக்கும் சம்பவம் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிவன் என்கிற தபால்காரர் குன்னூரில் 30 ஆண்டுகளாக கடிதங்களை உரியவர்களிடம் கொண்டு சேர்க்க அடர் வனத்தில் 15 கி.மீ தினமும் பயணிக்கின்றார். இந்த பயணத்தின் போது, யானை, கரடி, அல்லது காட்டெருமையால் போன்றவற்றால் துரத்தப்பட்டும் உள்ளார்.

ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாஹு நேற்று இவருடைய பணியை பாராட்டி "மிகுந்த அர்ப்பணிப்புடன்" தனது கடமையைச் செய்த தபால்காரர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

“தபால்காரர் சிவன் கடந்த வாரம் ஓய்வு பெறுவதற்கு முன்பு வரை நாள்தோறும் ஏறத்தாழ 15 கி.மீ அடர் வனத்தின் வழியே கடிதங்களை கொண்டு சேர்க்கும் பணியை சிறப்பாக செய்து வந்திருக்கிறார். துரத்தும் வன விலங்குகள் மற்றும் வழுக்கும் நீரோடைகள் போன்ற இடர்களை கடந்த 30 ஆண்டு காலமாக எதிர்கொண்டிருக்கிறார்.“ என சுப்ரியா டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இவருடைய டிவிட் தற்போது வைரலாகி வருகிறது. இதுவரை 61 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இந்த டிவிட்டிற்கு லைக்குகளை அள்ளி வழங்கியுள்ளனர். 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இதனை ரீ-டிவிட் செய்துள்ளனர்.

சிவனின் அர்பணிப்புகளை பாராட்டியும், அவரின் சேவை விருதுடன் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் தங்கள் கருத்துகளை பலர் டிவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

Click for more trending news


.