தமிழக அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு! தனியார் மருத்துவமனை தகவல்

உயர் கல்வித்துறை, தொழில் கல்வி, அறிவியல்  மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக  கே.பி.  அன்பழகன் இருந்து வருகிறார். ஒரு வாரத்திற்கு முன்பாக அவர் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழக  அமைச்சர் கே.பி.  அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு!  தனியார் மருத்துவமனை தகவல்

அமைச்சரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

ஹைலைட்ஸ்

  • தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு
  • தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார் அமைச்சர்
  • உடல் நிலை குணம் அடைந்து வருவதாக மருத்துவமனை தரப்பில் தகவல்
Chennai:

தமிழக  உயர்  கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை தனியார் மருத்துவமனை தெரிவித்திருக்கிறது. 

முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோ அமைச்சர் கே.பி.  அன்பழகனுக்கு சி.டி. ஸ்கேன் எடுத்துப் பார்க்கப்பட்டது.  இதில், எந்தவொரு பாதிப்பும் சரிவர தெரியவில்லை.

இதையடுத்து  அமைச்சர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார் என்று மியாட் இன்டர்நேஷனல்  மருத்துவமனை தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில்,  2-வதுகட்டமாக அமைச்சர் கே.பி.  அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

உயர் கல்வித்துறை, தொழில் கல்வி, அறிவியல்  மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக  கே.பி.  அன்பழகன் இருந்து வருகிறார். ஒரு வாரத்திற்கு முன்பாக அவர் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.