This Article is From Sep 04, 2019

சீன அதிபர் - பிரதமர் மோடி (PM Modi) இடையிலான சந்திப்பு: மகாபலிபுரத்தில் நடத்த வாய்ப்பு!

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மோடியும் ஜின்பிங்கும், சீனாவின் கடற்கரை நகரமான உஹானில் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர்

சீன அதிபர் - பிரதமர் மோடி (PM Modi) இடையிலான சந்திப்பு: மகாபலிபுரத்தில் நடத்த வாய்ப்பு!

அக்டோபர் மாதம் இந்த சந்திப்பு நடைபெறும்.

Chennai:

சீன அதிபர் ஸி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையிலான அரசு முறை சந்திப்பு, தமிழகத்தின் மகாபலிபுரத்தில் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இது குறித்து மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் நம்மிடம் தகவல் தெரிவித்துள்ளார். 

2 நாட்கள் நடக்க உள்ள இந்த சந்திப்பை நடத்த மகாபலிபுரமும் ஓர் இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறுகிறார். அக்டோபர் மாதம் இந்த சந்திப்பு நடைபெறும். இன்னும் சில இந்திய நகரங்களும் சந்திப்பு நடத்துவதற்கான பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும் அது குறித்த விவரங்களை அவர் நம்மிடம் பகிர்ந்து கொள்ளவில்லை. 

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மோடியும் ஜின்பிங்கும், சீனாவின் கடற்கரை நகரமான உஹானில் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர். இரு நாட்டு உறவையும் பலப்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டது. 

சென்னையிலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மகாபலிபுரத்தில் பல்வேறு வரலாற்று இடங்கள் மற்றும் கோயில்கள் அமைந்துள்ளன.  யுனெஸ்கோவின் உலக பாரம்பரியமிக்க இடங்களில் மகாபலிபுரமும் ஒன்றாகும். 
 

.