This Article is From Mar 07, 2020

சுற்றுச் சூழலுக்கு உகந்த சானிடரி நாப்கின்! மதுரைப் பெண்ணின் கண்டுபிடிப்பு!!

வேப்ப மரத்தின் பொருட்கள், கற்றாளை, திரிபலா தூள் உள்ளிட்டவற்றைக் கலந்து பாக்டீரியா எதிர்ப்பு தண்மை கொண்ட சானிட்டரி நாப்கினை தயாரித்துள்ளார் மதுரையைச் சேர்ந்த 42 வயது பெண்மணி கண்ணம்மா.

சுற்றுச் சூழலுக்கு உகந்த சானிடரி நாப்கின்! மதுரைப் பெண்ணின் கண்டுபிடிப்பு!!

தொழில் ரீதியாக நாப்கின்களை தயாரித்து வருகிறார் கண்ணம்மா.

ஹைலைட்ஸ்

  • 'ரசாயனம் ஏதும் சேர்க்காமல் சானிட்டரி நாப்கின் உருவாக்கப்பட்டுள்ளது'
  • 'மூலிகை பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன' என்கிறார் மதுரை கண்ணம்மா
  • தொழில் ரீதியாக மதுரை கண்ணம்மா சானிட்டரி நாப்கின்களை தயாரித்து வருகிறார்
Madurai:

 சுற்றுச் சூழலுக்கு உகந்ததும், குறைந்த செலவும் கொண்ட சானிட்டரி நாப்கின்களை மதுரையைச் சேர்ந்த 42 வயது பெண்மணி கண்ணம்மா உருவாக்கியுள்ளார். இதில் ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 

ஒருமுறை பயன்படுத்தும் இந்த சானிட்டரி நாப்கி 4 - 6 மணி நேரம் தாக்குப்பிடிக்கும் தண்மை கொண்டது. வேப்ப மரத்தின் பொருட்கள், கற்றாளை, திரிபலா தூள் உள்ளிட்டவற்றைக் கலந்து பாக்டீரியா எதிர்ப்பு தண்மை கொண்டதாக இதனைத் தயாரித்துள்ளார் கண்ணம்மா. 

இதில் சேர்க்கப்பட்டிருக்கும் மூலப் பொருட்கள் ஈரத்தை எளிதாக உறிஞ்சும் தன்மை கொண்டது என்று அவர் கூறியுள்ளார்.

ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், 'உடல் நலத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் சானிட்டரி நாப்கின்களை தயாரிக்க வேண்டும் என்று விரும்பினேன். இது 100 சதவீதம் பருத்தியால் தயாரிக்கப்பட்டது. இதில் எந்த ரசாயனமும் சேர்க்கப்படவில்லை' என்றார். 

உணவு மற்றும் குடிநீரைப் போன்று இயற்கையாகத் தயாரிக்கப்படும் சானிட்டரி நாப்கின்கள் பெண்களுக்கு அவசியமானவை என்றும் அவர் தெரிவித்தார். 

இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், ' எனக்கு மூலிகைச் செடிகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். மாதவிடாய் பிரச்சினைக்கு என்னால் முடிந்த எதையாவது செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். பள்ளியில் மாணவிகளுக்கு மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். அப்போதுதான் மாணவிகள், தங்களது ஆடைகளை இதனைச் சுத்தம் செய்வதற்காக எப்படிப் பயன்படுத்துகின்றனர் என்பதை அறிந்துகொண்டேன். சிலருக்கு நாப்கின் வாங்கப் பணம் இல்லாததால் அவர்கள் மாதவிடாய் காலத்தில் பள்ளிக்கே வருவதில்லை' என்றார். 

சானிட்டரி நாப்கின் வாங்குவதற்கு போதிய பணம் இல்லாதவர்களிடம் ஆலோசனைகள் கேட்டு, பின்னர் சுற்றுச் சூழலுக்கு உகந்த நாப்கின்களை தொழில் ரீதியாக கண்ணம்மா தயாரித்து வருகிறார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.