மதுரையில் ராகிங் கொடுமை! - ஒரே வகுப்பை சேர்ந்த 2 மாணவர்கள் தற்கொலை!

Madurai, Tamil Nadu: மதுரையில் கடந்த மார்ச் 2ஆம் தேதி முதலாமாண்டு பி.ஏ.பொருளாதாரம் படித்து வந்த 2 மாணவர்கள் விஷமருந்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து அவர்கள் மருத்துவனை அழைத்துச்செல்லப்பட்டனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
மதுரையில் ராகிங் கொடுமை! - ஒரே வகுப்பை சேர்ந்த 2 மாணவர்கள் தற்கொலை!

ராகிங் கொடுமையால் மனமுடைந்த 2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.


Madurai: 

மதுரை தனியார் கல்லூரியில் படித்து வந்த 2 மாணவர்கள் சீனியர் மாணவர்கள் சிலர் ராகிங் செய்ததால் மனமுடைந்தவர்கள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் 2ஆம் தேதி முதலாமாண்டு பி.ஏ.பொருளாதாரம் படித்து வந்த 2 மாணவர்கள் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதைத்தொடர்ந்து அவர்கள் மருத்துவனை அழைத்துச்செல்லப்பட்டனர். அதில் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், மற்றுமொரு மாணவன் 4 நாட்கள் கழித்து உயிரிழந்துள்ளான்.

இரண்டு மாணவர்களும் தொடர்ந்து சில நாட்களாக சீனியர் மாணவர்களால் ராகிங் கொடுமைக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இருவரும் இந்த முடிவை எடுத்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில், ராகிங் செய்ததாக கூறப்படும் ஜெயசக்தி என்ற மாணவரை போலிசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................