Weather: தமிழகம் மற்றும் கேரளாவில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

தமிழகம், கேரளா மற்றும் தென் கர்நாடாக உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
Weather: தமிழகம் மற்றும் கேரளாவில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

தமிழகம், கேரளா மற்றும் தென் கர்நாடாக உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கினாலும் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் இயல்பைவிட கூடுதலாகவே பெய்தது. இன்னும் ஓரிரு நாட்களில் தென்மேற்கு பருவமழை விடைபெற்று, வடகிழக்கு பருவ மழை துவங்கவுள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆந்திராவின் ராயலசீமா பகுதி, ராஜஸ்தான் மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் நாள் முழுவதும் பலத்த மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், உத்தரகண்ட், பஞ்சாப், கிழக்கு உத்தரப் பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட், பீகார், மேற்கு வங்கம் மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

டெல்லியை பொறுத்தவரையில், மிதமான வெப்பநிலையுடன், வானம் மேகமூட்டத்துடனும் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் இடி அல்லது மின்னலுக்கு வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவித்துள்ளது.

மேலும், வெப்பநிலையானது 24 டிகிரி செல்சியஸ் முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, தென்தமிழகம் அதை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உள்ளதால் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுவதாவது, தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

அதாவது, சேலம், கோவை, நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 4 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாக கூடும் எனவும் கூறியுள்ளது.



சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................