திருநங்கையுடன் திருமணம்! நீதிமன்றம் சென்று திருமணத்தை பதிவு செய்த தூத்துக்குடி இளைஞர்!!

அருண்குமார் – ஸ்ரீஜா இடையே கடந்த ஆண்டு அக்டோபரில் திருமணம் நடந்தது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
திருநங்கையுடன் திருமணம்! நீதிமன்றம் சென்று திருமணத்தை பதிவு செய்த தூத்துக்குடி இளைஞர்!!

திருமணத்தை பதிவுசெய்வதற்கு மாவட்ட பதிவாளர் முதலில் மறுப்பு தெரிவித்தார்.

Thoothukudi: 

தூத்துக்குடியில் இளைஞர் ஒருவர் திருநங்கையை மணமுடித்துள்ளார். அவர்களது நீதிமன்ற தலையீட்டை தொடர்ந்து முறைப்படி பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த 22 வயது அருண் குமார் ரயில்வேயில் கான்ட்ராக்ட் ஊழியராக பணி புரிந்து வருகிறார். திருநங்கை ஸ்ரீஜா, தனியார் கல்லூரி ஒன்றில் இளங்கலை ஆங்கிலம் பிரிவில் 2-ம் ஆண்டு பயில்கிறார்.

இருவரும் கடந்த ஆண்டு அக்டோபரில் அருள்மிக சங்கர ராமேஸ்வரா கோயிலில் திருமணம் செய்துகொண்டனர். இதனை பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய முயன்றபோது, மாவட்ட அதிகாரி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அருண் குமார் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இதில் இளைஞர் – திருநங்கையின் திருமணம் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கோர்ட் கடந்த ஏப்ரல் 22-ம்தேதி உத்தரவிட்டது.

இந்த நிலையில், நேற்று அருண் குமார் – ஸ்ரீஜா தம்பதிக்கு திருமண சான்றிதழ் அளிக்கப்பட்டிருக்கிறது. இளைஞர் - திருநங்கையின் திருமணம் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்பது இதுவே முதன்முறை. 

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................