Election Results 2019: ''தமிழகத்தையும் ஒரு மாநிலமாக மோடி பார்க்க வேண்டும்'' - கமல்!! #LiveUpdates

Tamil Nadu Lok Sabha Election Results 2019 Updates: கருத்துக் கணிப்பு முடிவுகளை உண்மையாக்கி பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 351 இடங்களை கைப்பற்றி உள்ளன. இவற்றில் 302 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
Election Results 2019: ''தமிழகத்தையும் ஒரு மாநிலமாக மோடி பார்க்க வேண்டும்'' - கமல்!! #LiveUpdates

Live Tamil Nadu Election Results: தேர்தல் குறித்த அனைத்து தகவல்களை NDTV தமிழ் உடனுக்குடன் வழங்குகிறது.

கருத்துக்கணிப்பில் கூறப்பட்டபடியே பாஜக கூட்டணி நாடு முழுவதும் 351 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. இதில் பாஜக மட்டுமே 302 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. 

தமிழ்நாட்டை பொறுத்தளவில் திமுக கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக ஒரேயொரு தொகுதியில் வென்றுள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 9 தொகுதிகளில் 8 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.

தேர்தல் குறித்த தகவல்களை உடனுக்குடன் இந்த பகுதியில் அளிக்கப்படுகின்றன. லைவ் அப்டேட்ஸை பெற இந்த தளத்தில் இணைந்திருங்கள்...
May 24, 2019
13:43 (IST)
ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்ற கனிமொழி!

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கவிஞர் கனிமொழி, திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். 

May 24, 2019
13:26 (IST)
ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து!!

தென் சென்னை தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். 

May 24, 2019
12:54 (IST)
''இந்தியாவை மேலும் வலுப்படுத்தி, உலகளவில் இந்தியாவை முதன்மை நாடாக பிரதமர் மோடி உயர்த்துவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.'' - அன்புமணி ராமதாஸ் பேட்டி


May 24, 2019
12:46 (IST)
ஜெகனுக்கு ஸ்டாலின் வாழ்த்து!!

ஆந்திராவில் முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இங்கு சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி தோல்வி அடைந்துள்ளது. கடந்த வாரம்தான் சந்திரபாபு நாயுடு ஸ்டாலினை சந்தித்து சென்றார். 

May 24, 2019
12:22 (IST)
வாக்கு சதவீதம் அதிகம்பெற்ற திமுக!!

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக மொத்தம் பதிவான வாக்குகளில் 32.76 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறது. கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு 12.76 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. May 24, 2019
12:18 (IST)
''மாநிலத்தை ஆளும் அதிமுக அரசு கவிழும் என்று ஸ்டாலின் கூறினார். ஆனால் அவ்வாறு ஏதும் நடக்கவில்லை. இதற்காக அவர் ராஜினாமா செய்வாரா?. மத்திய பாஜகவுக்கு எதிராக தவறான பிரசாரங்களை செய்து திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது'' - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!! 

May 24, 2019
11:42 (IST)
''எதிர்பார்த்ததை விட அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. நெஞ்சை நிமிர்த்தி பேசக்கூடிய அளவுக்கு மக்கள் எங்களுக்கு வாக்கு அளித்துள்ளார்கள். பாஜகவின் பி டீன் யார் என்பதை செய்தியாளர்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும். நேர்மையான வழியில் நாங்கள் பயணிப்பது நம்பிக்கை அளிக்கிறது. நாங்கள் நேர்மையின் ஏ டீம்'' - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பேட்டி. 

May 24, 2019
11:31 (IST)
''தமிழகத்தையும் மோடி ஒரு மாநிலமாக பார்க்க வேண்டும். நாங்கள் பாஜகவின் பி டீம் அல்ல. எனக்கு அரசியல் தொழில் அல்ல. வெற்றி பெற்ற மாநிலங்களுக்கு இணையாக தமிழகத்தையும் பிரதமர் மோடி பார்க்க வேண்டும்.'' - கமல் பேட்டி

May 24, 2019
11:13 (IST)
சென்னையை வசமாக்கிய திமுக!

வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை என 3 மக்களவை தொகுதிகளையும் திமுக கைப்பற்றி உள்ளது. வடசென்னையில் கலாநிதி வீராசாமி, மத்திய சென்னையில் தயாநிதி மாறன், தென் சென்னையில் தமிழச்சி தங்க பாண்டியன் ஆகியோர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 

May 24, 2019
11:09 (IST)
முரளி மனோகர் ஜோஷியுடன் மோடி

பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியை சந்தித்து பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் ஆலோசனை நடத்தினர். இந்த தேர்தலில் ஜோஷி போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி தொகுதி மக்களுக்கு கடிதம் எழுதியிருந்தார் அவர். 

May 24, 2019
11:06 (IST)
3.87 சதவீத வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சி!!

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி மொத்தம் பதிவான வாக்குகளில் 3.87 சதவீதத்தை கைப்பற்றியுள்ளது. 

May 24, 2019
11:03 (IST)
''திராவிட இயக்கங்களின் உழைப்பு இன்னும் உயிர்ப்போடு இருப்பதை தமிழக தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன'' - கருணாநிதி சமாதியில் மரியாதை செலுத்திய பின்னர் கனிமொழி பேட்டி

May 24, 2019
10:59 (IST)
அத்வானியுடன் மோடி - அமித் ஷா சந்திப்பு!!

ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில் பாஜக மூத்த தலைவர் அத்வானியை பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்  ஷா ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். 


May 24, 2019
10:46 (IST)
ஜூன் 30-ல் பிரதமர் மோடி பதவியேற்கிறார்!

நாடு முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி  350-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக மட்டுமே 300-க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றியது. இந்த நிலையில் மோடி மீண்டும் பிரதமராக வரும் 30-ம்தேதி பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

May 24, 2019
10:37 (IST)
ஸ்டெர்லைட்டை மூட நடவடிக்கை!

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றுள்ள கனிமொழி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இங்கு கனிமொழியை எதிர்த்து போட்டியிட்டவர் பாஜக தமிழக தலைவர் தமிழிசை.

May 24, 2019
10:33 (IST)
ஸ்டாலினுக்கு மன்மோகன் வாழ்த்து!

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து கூறியுள்ளார். தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் 8 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. புதுவையில் காங்கிரஸ் வென்றுள்ளது.

 
May 24, 2019
10:26 (IST)
தமிழகத்தில் 3-வது இடத்தை பிடித்த அமமுக!!

மக்களவை தேர்தலில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 4.8 சதவீத வாக்குகளைப் பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளது. ஆனால் எந்த தொகுதியும் தினகரனின் கட்சி டெபாசிட் வாங்கவில்லை. 

May 24, 2019
10:13 (IST)
ஸ்டாலினை வாழ்த்திய ரஜினி!

பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற தி.மு.க தலைவர், மதிப்பிற்குரிய நண்பர் ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று ஸ்டாலினை ரஜினி வாழ்த்தியுள்ளார். தமிழகத்தில் 37 தொகுதிகளை வென்றுள்ளது திமுக கூட்டணி. 

May 24, 2019
09:41 (IST)
நீண்ட இழுபறிக்கு பின் திருமாவின் வெற்றி அறிவிப்பு!


சுமார் 4 மணிநேர இழுபறிக்கு பின்னர் சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார். 

May 23, 2019
23:15 (IST)
திருமாவளவன் தொடர் முன்னிலை!

சிதம்பரம் தொகுதியில் 4,95,850 வாக்குகள் பெற்று திருமாவளவன் தொடர் முன்னிலை வகித்து வருகிறார்.


May 23, 2019
22:57 (IST)
தூத்துக்குடியில் கனிமொழி வெற்றி

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை விட 3,47,209 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

May 23, 2019
22:51 (IST)
22 சட்டமன்றத் தேர்தல் நிலவரம் (இரவு 10:30 மணி முடிவுகள்):

1.பூந்தமல்லி

கிருஷ்ணசாமி.ஏ (திமுக)- 1,,35,984

வைத்தியநாதன் (அதிமுக)- 76,355

2.பெரம்பூர்

ஆர்.டி.சேகர் (திமுக)- 73,647

ஆர்.எஸ்.ராஜேஷ் (அதிமுக)- 26,950

3.திருப்போரூர் 

இதயவர்மன் (திமுக)- 1,02,491 -வெற்றி

ஆறுமுகம் (அதிமுக)- 81,845

4.சோழிங்கர்

சம்பத்து (அதிமுக)- 1,03,271 - வெற்றி

அசோகன் (திமுக)- 86,792

5.குடியாத்தம்

காத்தவராயன் (திமுக)- 1,05,316- வெற்றி

மூர்த்தி (அதிமுக)- 78,155

6.ஆம்பூர்

வில்வநாதன் (திமுக)- 95,855 - வெற்றி

ஜோதி ராமலிங்க ராஜா (அதிமுக)- 58,591

7.ஓசூர்

ஜோதி (அதிமுக)- 91,603 - வெற்றி

சத்யா (திமுக)- 1,14,182 

8.பாப்பிரெட்டிப்பட்டி

கோவிந்தசாமி (அதிமுக) - 1,00,513 

மணி.ஏ (திமுக)- 82,208

9.ஹாரூர் 

சம்பத்குமார் (அதிமுக)- 88,282

கிருஷ்ணகுமார் (திமுக) - 78,328

10.நிலக்கோட்டை

தேன்மொழி (அதிமுக)- 90,734

சவுந்திர பாண்டியன் (திமுக)- 69,565

11.திருவாரூர்

பூண்டி கலைவாணன் (திமுக)- 1,14,274

ஜீவநாதம் (அதிமுக)- 51,986

12.தஞ்சாவூர்

டி.கே.ஜி.நீலமேகம் (திமுக)- 87,076 - வெற்றி

ஆர்.காந்தி (அதிமுக)- 54,818

13.மானாமதுரை 

நாகராஜன் (அதிமுக)- 84,826

காசிலிங்கம் (திமுக)- 76,062

14.ஆண்டிப்பட்டி

மகாராஜன் (திமுக)- 70,957

லோகிராஜன் (அதிமுக)- 64,821

15.பெரியகுளம்

சரவணக்குமார் (திமுக)- 66,986

மயில்வேல் (அதிமுக)- 51,516

16.சாத்தூர்

ராஜவர்மன் (அதிமுக)- 76,820 - வெற்றி

ஸ்ரீநிவாசன் (திமுக)- 75,719

17.பரமக்குடி

சம்பத்குமார் (திமுக)- 57,670

சாதன் பிரபாகரன் (அதிமுக)- 70,328

18.விலாத்திக்குளம்

சின்னப்பன் (அதிமுக)- 70,002 - வெற்றி

ஜெயக்குமார் (திமுக)- 41,042

19.அரவக்குறிச்சி

செந்தில் பாலாஜி (திமுக)- 92,138

செந்தில்நாதன் (அதிமுக)- 56,445

20.சூலூர்

கந்தசாமி (அதிமுக)- 1,00,743

பொங்கலூர் பழனிசாமி (திமுக)- 90,637

21.திருப்பரங்குன்றம்

சரவணன் (திமுக)- 85,376 -வெற்றி

முனியாண்டி (அதிமுக)- 82,964

22.ஒட்டப்பிடாரம் 

சண்முகையா (திமுக)- 73,001

மோகன் (அதிமுக)- 53,375

மொத்தமாக திமுக 7 இடங்களிலும், அதிமுக 6 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. 5-ல் திமுகவும், 4 தொகுதிகளில் அதிமுக-வும் வெற்றி பெற்றுள்ளது.
May 23, 2019
22:50 (IST)
டிடிவி தினகரனின் அமமுக படுதோல்வி!

மக்களவை, சட்டசபை இடைத்தேர்தல் என தனித்து போட்டியிட்ட டிடிவி தினகரனின் அமமுக படுதோல்வியடைந்துள்ளது. இது தொடர்பாக டிடிவி தினகரன் டிவிட்டரில் பதிவு, தேர்தல் அரசியலில் வெற்றி - தோல்வி என்பது இயல்பானது. 


May 23, 2019
22:40 (IST)
தென்சென்னை திமுக வேட்பாளர் வெற்றி 

தென்சென்னை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 5,63,204 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 

May 23, 2019
22:23 (IST)

திருமாவளவன் மீண்டும் முன்னிலை!

சிதம்பரம் தொகுதியில் நீண்ட இழுபறிக்கு பின்னர் அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை விட 3000 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் மீண்டும் முன்னிலை வகித்து வருகிறார்.

May 23, 2019
21:59 (IST)
மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து
May 23, 2019
20:44 (IST)
இடைத் தேர்தல் முடிவுகள்: திமுக- 3; அதிமுக-1-ல் வெற்றி!

வில்வநாதன்-திமுக (ஆம்பூர்), இதயவர்மன்-திமுக (திருப்போரூர்), காத்தவராயன்-திமுக (குடியாத்தம்) சின்னப்பன்-அதிமுக (விலாத்திக்குளம்) ஆகியோர் வெற்றி இடைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

May 23, 2019
20:39 (IST)
காஞ்சிபுரத்தில் திமுக வெற்றி!!

காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் ஜி.செல்வம் 2 லட்சத்து 82 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிப்பு

May 23, 2019
20:35 (IST)
திருப்பரங்குன்றத்தில் திமுக வெற்றி!!

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சரவணன் 3 ஆயிரத்து 213 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். 

May 23, 2019
20:32 (IST)
டெபாசிட்டை இழந்த டிடிவி கட்சி!!

மக்களவை தேர்தலில் போட்டியிட்ட தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அனைத்து தொகுதியிலும் டெபாசிட்டை இழந்துள்ளது. அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் தன்பக்கம் இருப்பதாக டிடிவி கூறி வரும் நிலையில்,  ஒரு தொகுதியில் கூட டெபாசிட்டை பெறாதது அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

May 23, 2019
20:28 (IST)
எல்.கே. சுதீஷ் தோல்வி!!

கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளரும், விஜயகாந்தின் மைத்துனருமான எல்.கே. சுதீஷ், திமுக வேட்பாளர் கவுதம சிகாமணியிடம் 4,02,638 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி  அடைந்தார். 

May 23, 2019
20:25 (IST)
''நடுத்தர குடும்பத்தினர் திருப்தி அடைந்ததுதான் எங்களது தேர்தல் வெற்றியி பிரதிபலிக்கிறது. ஒருபோதும் நான் தளர்வடையவில்லை. பிரதமர் ஆனது முதல் நான் பல தடைகளை கடந்துள்ளேன்.'' - பிரதமர் மோடிMay 23, 2019
20:23 (IST)
13 மாநிலங்களில் பாஜகவுக்கு ஓரிடம் கூட கிடைக்கவில்லை என பாஜக தலைவர் அமித் ஷா விமர்சனம். 
May 23, 2019
20:17 (IST)
மக்களவைக்கு தமிழகத்தில் இருந்து 3 பெண்கள் தேர்வு!

தூத்துக்குடி தொகுதியிலிருந்து கனிமொழியும், கரூரில் இருந்து ஜோதிமணியும், தென் சென்னை தொகுதியில் இருந்து தமிழச்சி தங்கப்பாண்டியனும் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

May 23, 2019
20:09 (IST)
தயாநிதி மாறன் வெற்றி!

மத்திய சென்னை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தயாநிதி மாறன் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிப்பு. வாக்கு வித்தியாசம் 3,00,437 வாக்குகள். 

May 23, 2019
20:05 (IST)
4 சதவீத வாக்குகள் பெற்ற நாம் தமிழர் கட்சி!

தமிழகத்தில் 37 மக்களவை தொகுதியில்  போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி மொத்தம் 4 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறது. 

May 23, 2019
20:02 (IST)
தமிழச்சி தங்க பாண்டியன் வெற்றி!!

தென் சென்னை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தமிழச்சி தங்க பாண்டியன் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிப்பு

May 23, 2019
19:59 (IST)
அமேதியில் ராகுல் பின்னடைவு!!

அமேதி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 1,04,498  வாக்குகள் பின்னடைவில் உள்ளார். பாஜகவின் ஸ்மிருதி இராணி முன்னிலை. May 23, 2019
19:54 (IST)
கர்நாடகாவில் முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவகவுடா தும்கூர் மக்களவை தொகுதியில் 13,339 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் பசவராஜிடம் தோல்வி அடைந்துள்ளார். 

May 23, 2019
19:50 (IST)
சிதம்பரம் மக்களவை தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் 443657 ஓட்டுக்கள் பெற்று ஏறத்தாழ 9000 வாக்குகள் முன்னிலை
May 23, 2019
19:48 (IST)
சட்டமன்ற இடைத்தேர்தல் : சோளிங்கரில் அதிமுக வேட்பாளர் சம்பத் 16, 479 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி. 
May 23, 2019
19:45 (IST)
இன்று மாலை 7:30 மணி நேர நிலவரப்படி நட்சத்திர வேட்பாளர்கள் வாங்கிய வாக்குகள்:

மத்திய சென்னை:

தயாநிதி மாறன் (திமுக)- 4,47,150

சாம் பால் (பா.ம.க)- 1,46,813

தென் சென்னை:

தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக)- 4,99,384

ஜெயவர்த்தன் (அதிமுக)- 2,71,002

சிதம்பரம்:

திருமாவளவன் (விசிக)- 4,26,128

சந்திரசேகர் (அதிமுக)- 4,10,096

கோவை:

சி.பி.ராதாகிருஷ்ணன் (பாஜக)- 3,90,155

பி.ஆர்.நடராஜன் (சிபிஎம்)- 5,66,758

தர்மபுரி:

அன்புமணி ராமதாஸ் (பா.ம.க)- 4,85,109

செந்தில் குமார் (திமுக)- 5,47,344

கள்ளக்குறிச்சி:

சுதீஷ் (தேமுதிக)- 3,18,219

பொன் கவுதம சிகாமணி (திமுக)- 7,09,599

கன்னியாகுமரி:

பொன் ராதாகிருஷ்ணன் (பாஜக) - 3,45,554

வசந்த குமார் (காங்.) - 5,94,881

கரூர்:

தம்பிதுரை (அதிமுக)- 2,59,461

ஜோதிமணி (காங்.)- 6,52,557

மதுரை:

சு.வெங்கடேசன் (சிபிஎம்) - 4,39,967

ராஜ் சத்யன் (அதிமுக)- 3,03,545

சிவகங்கை:

கார்த்தி சிதம்பரம் (காங்.)- 4,85,796

எச்.ராஜா (பாஜக)- 1,97,223

தென்காசி:

கிருஷ்ணசாமி (பு.த)- 3,54,216

தனுஷ் எம்.குமார் (திமுக)- 4,70,346

தேனி:

ரவீந்திரநாத் குமார் (அதிமுக)- 3,11,680

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்.)- 2,61,844

தங்க தமிழ்ச்செல்வன் (அமமுக)- 82,515

தூத்துக்குடி:

கனிமொழி (திமுக)- 5,50,556

தமிழிசை சவுந்திரராஜன் (பாஜக)- 2,11,467

திருச்சி:

திருநாவுக்கரசர் (காங்.)- 6,15,667

இளங்கோவன் (தேமுதிக)- 1,61,379
May 23, 2019
19:07 (IST)
39 ஆண்டுகளுக்கு பின்னர் சேலத்தில் வெற்றி பெற்ற திமுக!!

1980-ல் திமுக வெற்றி பெற்றது. இதன்பின்னர் காங்கிரஸ், அதிமுக கட்சிகள் மாறி மாறி வெற்றி பெற்றுவந்த நிலையில் தற்போது திமுக வேட்பாளர் எஸ்.ஆர். பார்த்திபன் வெற்றி பெற்றுள்ளார். இங்கு அவர் 4,84,658 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சரவணன் 3,63,813 வாக்குகளும் பெற்றனர். 

May 23, 2019
19:00 (IST)
மோடிக்கு ப.சிதம்பரம் வாழ்த்து!!

மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில், ''நாடாளுமன்றத் தேர்தலில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்ற திரு நரேந்திர மோடி மற்றும் பாஜக ஆகியவர்களுக்கு என்னுடைய மனம் நிறைந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். உயர்ந்த பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்கள் நல்வாழ்வு ஆகியவற்றுக்கு அவர்கள் பாடுபட என்னுடைய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.


May 23, 2019
18:55 (IST)
''ஃபீனிக்ஸ் பறவையை போல மீண்டும் எழுந்து நீற்போம்'' : டிடிவி தினகரன்

ட்விட்டரில் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், 

''இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கற்றுத்தந்த துணிவோடு, ஃபீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுந்து நிற்போம். தூய்மையான அன்போடு தமிழ்நாட்டு மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்க தொடர்ந்து பாடுபடுவோம். தமிழகத்தின் உரிமைகளுக்காக அமமுகவின் குரல் எப்போதும் போல ஓங்கி ஒலித்திடும்.

மக்கள் தீர்ப்புக்குத் தலைவணங்குகிறோம்! நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம். தேர்தல் அரசியலில் வெற்றி - தோல்வி என்பது இயல்பானது.'' என்று கூறியுள்ளார்.

May 23, 2019
18:53 (IST)
தேர்தல் வெற்றிக்கு பின்னர் சவுக்கிதார் அடைமொழியை பாஜக தலைவர்கள் சமூக வலைதள அக்கவுன்டுகளில் நீக்கி வருகின்றனர்.  


May 23, 2019
18:49 (IST)
தோல்வி முகத்தில் நட்சத்திர வேட்பாளர்கள்!!

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், கன்னியாகுமரி தொகுதியில் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய செயலாளர் சிவகங்கை தொகுதியிலும் பின் தங்கியுள்ளனர்.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தர்மபுரி மக்களவை தொகுதியில் பின்தங்கியுள்ளார். காங்கிரசின் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தேனியில் பின்தங்கியுள்ளார். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் உள்ளிட்டோர் பின் தங்கியுள்ளனர். 

May 23, 2019
18:38 (IST)
தேர்தல் வெற்றிக்கு பின்னர் பாஜக தலைவர்கள் சமூக வலைதளங்களில் தங்களது பெயருக்கு முன்பிருந்த சவுக்கிதார் அடைமொழியை நீக்கி வருகின்றனர்.
May 23, 2019
18:10 (IST)
வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின்!!

ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்....

''தலை வணக்கம் தமிழகமே! நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் எங்கள்மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம்! தமிழகத்தின் உரிமைகளை காக்க என்றும் குரல் கொடுப்போம்!''

என்று கூறியுள்ளார்.

May 23, 2019
18:06 (IST)
ஆரணியில் காங்கிரஸ் வெற்றி!!

ஆரணி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

May 23, 2019
17:57 (IST)
பாஜகவுக்கு ராகுல் வாழ்த்து
தேர்தல் தோல்விக்கு பின்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மக்கள் மோடிதான் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். அவர்களது முடிவை ஏற்றுக் கொள்கிறோம். பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கும் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். 

May 23, 2019
17:53 (IST)
திருமா மீண்டும் முன்னிலை!!

சிதம்பரம் மக்களவை தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமா வளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டார். தற்போதைய நிலவரப்படி திருமாவளவன் 3,08,345 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திர சேகர் 3,02,246 வாக்குகளும் பெற்றுள்ளனர். 

May 23, 2019
17:46 (IST)
தயாநிதி மாறன் வெற்றி!!

மத்திய சென்னையில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கலாநிதி மாறன் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

May 23, 2019
17:43 (IST)
அன்புமணியை பின்னுக்கு தள்ளிய செல்வகுமார்!!

தர்மபுரி மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பாக பாமக வேட்பாளர் அன்புமணி போட்டியிட்டார். தற்போது வரை அன்புமணியை விட திமுக வேட்பாளர் செல்வ குமார் 50 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். May 23, 2019
17:40 (IST)
திருநாவுக்கரசர் வெற்றி!!

திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

May 23, 2019
17:37 (IST)
வடசென்னையில் திமுக வெற்றி!!

வட சென்னை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கலாநிதி வீராசாமி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. May 23, 2019
17:32 (IST)
'திமுக வெற்றியால் தமிழகத்திற்கு எந்த பலனும் ஏற்படப்போவதில்லை' - தோல்வி முகத்திற்கு பின்னர் தமிழிசை பேட்டி!

May 23, 2019
17:29 (IST)
22 சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவு நிலவரம் (மாலை 5:30 மணி முடிவுகள்):

1.பூந்தமல்லி

கிருஷ்ணசாமி.ஏ (திமுக)- 74620

வைத்தியநாதன் (அதிமுக)- 40917

2.பெரம்பூர்

ஆர்.டி.சேகர் (திமுக)- 20,184

ஆர்.எஸ்.ராஜேஷ் (அதிமுக)- 7,480

3.திருப்போரூர் 

இதயவர்மன் (திமுக)- 94,264

ஆறுமுகம் (அதிமுக)- 73,911

4.சோழிங்கர்

சம்பத்து (அதிமுக)- 96,866

அசோகன் (திமுக)- 80,223

5.குடியாத்தம்

காத்தவராயன் (திமுக)- 96,908

மூர்த்தி (அதிமுக)- 7,115

6.ஆம்பூர்

வில்வநாதன் (திமுக)- 94,904

ஜோதி ராமலிங்க ராஜா (அதிமுக)- 58,319

7.ஓசூர்

ஜோதி (அதிமுக)- 72,853

சத்யா (திமுக)- 94,126 

8.பாப்பிரெட்டிப்பட்டி

கோவிந்தசாமி (அதிமுக) - 63,659

மணி.ஏ (திமுக)- 44,214

9.ஹாரூர் 

சம்பத்குமார் (அதிமுக)- 56,202

கிருஷ்ணகுமார் (திமுக) - 47,660

10.நிலக்கோட்டை

தேன்மொழி (அதிமுக)- 76,399

சவுந்திர பாண்டியன் (திமுக)- 60,864

11.திருவாரூர்

பூண்டி கலைவாணன் (திமுக)- 52,062

ஜீவநாதம் (அதிமுக)- 23,010

12.தஞ்சாவூர்

டி.கே.ஜி.நீலமேகம் (திமுக)- 70,054

ஆர்.காந்தி (அதிமுக)- 46,088

13.மானாமதுரை 

நாகராஜன் (அதிமுக)- 65,633

காசிலிங்கம் (திமுக)- 57,984

14.ஆண்டிப்பட்டி

மகாராஜன் (திமுக)- 45,163

லோகிராஜன் (அதிமுக)- 44,898

15.பெரியகுளம்

சரவணக்குமார் (திமுக)- 48,198

மயில்வேல் (அதிமுக)- 35,673

16.சாத்தூர்

ராஜவர்மன் (அதிமுக)- 64,445

ஸ்ரீநிவாசன் (திமுக)- 61,447

17.பரமக்குடி

சம்பத்குமார் (திமுக)- 21,840

சாதன் பிரபாகரன் (அதிமுக)- 26,256

18.விலாத்திக்குளம்

சின்னப்பன் (அதிமுக)- 70,002

ஜெயக்குமார் (திமுக)- 41,042

19.அரவக்குறிச்சி

செந்தில் பாலாஜி (திமுக)- 48,942

செந்தில்நாதன் (அதிமுக)- 34,124

20.சூலூர்

கந்தசாமி (அதிமுக)- 71,346

பொங்கலூர் பழனிசாமி (திமுக)- 68,619

21.திருப்பரங்குன்றம்

சரவணன் (திமுக)- 63,118

முனியாண்டி (அதிமுக)- 62,057

22.ஒட்டப்பிடாரம் 

சண்முகையா (திமுக)- 57,193

மோகன் (அதிமுக)- 43,024

மொத்தமாக திமுக 13 இடங்களிலும், அதிமுக 9 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

May 23, 2019
17:26 (IST)
மோடிக்கு பாக். பிரதமர் வாழ்த்து!!

பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், தெற்காசியாவில் வளமும், வளர்ச்சியையும் ஏற்படுத்துவதற்கு பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கி உள்ளதாக கூறியுள்ளார். 

May 23, 2019
17:23 (IST)
தஞ்சையில் திமுக வெற்றி!!

தஞ்சை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.எஸ். பழனி மாணிக்கம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


May 23, 2019
17:19 (IST)

முதல்முறையாக முன்னிலைக்கு வந்த திருமா..!


சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில் முதல்முறையாகமுன்னிலை பெற்றுள்ளார் திருமாவளவன்.


திருமா (விசிக)- 2,57,931


சந்திரசேகர் (அதிமுக)- 2,55,361


May 23, 2019
17:16 (IST)
விளாத்தி குளத்தில் அதிமுக வெற்றி!

விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் சின்னப்பன் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

May 23, 2019
17:11 (IST)
பாஜகவுக்கு விஷால் வாழ்த்து!!

தேசிய அளவில் பெருவாரியான இடங்களை கைப்பற்றிய பாஜகவுக்கு  நடிகர் விஷால் வாழ்த்துக் கூறியுள்ளார். 

May 23, 2019
17:00 (IST)
தமிழகத்தில் 3-வது இடம்பிடித்த கட்சிகள்

20 தொகுதிகளில் அம்மா மக்கள்  முன்னேற்ற கழகமும்
12 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யமும்
6 இடங்களில் நாம் தமிழர் கட்சியும் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளன. 
May 23, 2019
16:55 (IST)
''தொங்கும் பாராளுமன்றமாக இல்லாமல் தங்கும் பாராளுமன்றம் அமைந்துள்ளது. தமிழகத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி. மற்றவர்கள் பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கவில்லை என்பதை உணர்வார்கள். தூத்துக்குடி மக்கள் தவறுசெய்துவிட்டார் என்றே கருதுகிறேன். பிரதமர் மோடிக்கு நாடு முழுவதும் வரவேற்பு உள்ள நிலையில் தமிழகத்தில் பொய் பிரசாரம் பரப்பப்பட்டுள்ளது'' : 

பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் பேட்டி. 

May 23, 2019
16:47 (IST)

4 மாநிலங்களில் பாஜக முழு வெற்றி!


மத்திய பிரதேசம்மகாராஷ்டிராராஜஸ்தான் மற்றும் டெல்லியில் உள்ள அனைத்து நாடாளுமன்றத்தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 


May 23, 2019
16:45 (IST)
May 23, 2019
16:43 (IST)
''தமிழகம் திராவிட இயக்கக் கோட்டை என்பதை பறைசாற்றிய வாக்காள பெருமக்களுக்கு நன்றி!! தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்பதை மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்'' - வைகோ
May 23, 2019
16:35 (IST)
ராகுல் காந்தி வெற்றி!

கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் ராகல் காந்தி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 12,76, 945 வாக்குகளை பெற்ற ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

May 23, 2019
16:28 (IST)
நீலகிரியில் ஆ.ராசா வெற்றி!

நீலகிரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆ. ராசா 2,05,357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 23 சுற்றுகள் முடிவில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

May 23, 2019
16:24 (IST)
வட சென்னையில் வெற்றியை நோக்கி திமுக!!

வடசென்னையில் திமுக வேட்பாளர் கலாநிதி வீரசாமி, தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன் ராஜை விட 2.5 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். 
May 23, 2019
16:16 (IST)
மோடிக்கு அத்வானி வாழ்த்து!!

பெருவாரியான இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வரும் நிலையில் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு பாஜக மூத்த தலைவ அத்வானி வாழ்த்து கூறியுள்ளார். எதிர்பாராத அளவுக்கு மிகப்பெரும் வெற்றியை தந்த பிரதமர் மோடிக்கும், அமித் ஷாவுக்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய பாஜக தொண்டர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

May 23, 2019
16:06 (IST)
கனிமொழி 2  லட்சம் வாக்குகள் முன்னிலை!!

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி 3,24,161 வாக்குகளும், பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தர ராஜன் 1,14,401 வாக்குகளும் பெற்றுள்ளனர். 


May 23, 2019
15:58 (IST)
மன்சூர் அலி கான் பின்னடைவு!!

நாம் தமிழர் கட்சி சார்பாக திண்டுக்கலில் போட்டியிடும் நடிகர் மன்சூர்அலி கான் மதியம் 3 மணி நிலவரப்படி 28,638 வாக்குகளை பெற்றுள்ளார். மொத்தத்தில் அவர் 4-வது இடத்தில் இருக்கிறார். May 23, 2019
15:52 (IST)
நாம் தமிழரை முந்தும் மக்கள் நீதி மய்யம்

மத்திய சென்னை தொகுதியில் தற்போது வரை நாம் தமிழர் கட்சி 20,898 வாக்குகளையும், மக்கள் நீதிமய்யம் 65,807 வாக்குகளையும் பெற்றுள்ளனர். 


May 23, 2019
15:51 (IST)
கமல் கட்சியை முந்தும் நோட்டா!!

ஆரணி மக்களவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் 12,947 வாக்குகளை பெற்றுள்ளது. இங்கு நோட்டாவில் தற்போது வரை 14,540 வாக்குகள் பதிவாகியுள்ளன. 

May 23, 2019
15:46 (IST)
சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களில் முன்னணி - அதிமுக 9 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 
May 23, 2019
15:44 (IST)
2 லட்சம் வாக்குகள் பின் தங்கினார் தமிழிசை!!

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் தற்போதைய நிலவரப்படி கனிமொழி (திமுக)- 3,19,490 வாக்குகளும், தமிழிசை சவுந்திரராஜன் (பாஜக)- 1,12,550 வாக்குகளும் பெற்றுள்ளனர். 


May 23, 2019
15:40 (IST)
30,787 வாக்குகள் பின்னடைவில் அன்புமணி!!

தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர் அன்புமணி திமுக வேட்பாளர் செல்வகுமாரை விட 30,787 வாக்குகள் பின்தங்கியுள்ளார். 


May 23, 2019
15:38 (IST)
தொடர் பின்னடைவில் எச். ராஜா!!

சிவகங்கை தொகுதியில் தற்போதைய நிலவரப்படி எச். ராஜா 1,03,389 வாக்குகளும், கார்த்தி சிதம்பரம் 2,44,209 வாக்குகளும் பெற்றுள்ளனர். 

May 23, 2019
15:36 (IST)
தற்போது வரை தமிழகத்தின் முக்கிய தொகுதிகளின் நிலவரம்!!


சிதம்பரம் தொகுதி:

திருமாவளவன் (விசிக)- 1,47,587

சந்திரசேகர் (அதிமுக)- 1,53,104

கோவை தொகுதி

சி.பி.ராதாகிருஷ்ணன் (பாஜக)- 1,88,741

பி.ஆர்.நடராஜன் (சிபிஎம்)- 2,69,453

தர்மபுரி தொகுதி

அன்புமணி ராமதாஸ் (பா.ம.க)- 2,57,810

செந்தில் குமார் (திமுக)- 2,88,597

கள்ளக்குறிச்சி தொகுதி

சுதீஷ் (தேமுதிக)- 2,27,050

பொன் கவுதம சிகாமணி (திமுக)- 5,25,958

கன்னியாகுமரி தொகுதி

பொன் ராதாகிருஷ்ணன் - 1,58,388

வசந்த குமார் - 3,07,702

May 23, 2019
15:33 (IST)
1.10 லட்சம் வாக்குகளில் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை!

தென்சென்னையில் திமுக வேட்பாளராக தமிழச்சி தங்க பாண்டியன் போட்டியிடுகிறார். அவர் தற்போது வரையில் 2,55,630 வாக்குகளை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து களத்தில் நிற்கும் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் 1,38,928 வாக்குகளை பெற்றிருக்கிறார். 

May 23, 2019
15:29 (IST)
வென்றார் மோடி!!
வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3.85 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி வெற்றி பெற்றுள்ளார். 


May 23, 2019
15:26 (IST)
2 லட்சம் வாக்குகள் முன்னிலையில் தயாநிதி

மத்தியசென்னை தொகுதியின் தற்போதைய நிலவப்படி தயாநிதி மாறன் 2,98,427  வாக்குகளையும், அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர் சாம்பால் 99,183 வாக்குகளையும் பெற்றுள்ளனர். 

May 23, 2019
15:21 (IST)
1.40 லட்சம் வாக்குகள் பின்னடைவில் பொன்.ராதாகிருஷ்ணன்.

தற்போது வரை கன்னியாகுமரியில் பதிவான வாக்குகளில் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் 1,41,204 வாக்குகளை பெற்றுள்ளார். அவரைஎதிர்த்து நிற்கும் காங்கிரஸ் வேட்பாளர் எச். வசந்த குமார் 2,88,085 வாக்குகளை பெற்றிருக்கிறார். 

May 23, 2019
15:19 (IST)
திருவள்ளூரில் ஜெயக்குமார் முன்னிலை!!

திருவள்ளூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கே. ஜெயக்குமார் தன்னை எதிர்த்து களத்தில் நிற்கும் அதிமுக வேட்பாளர் வேணு கோபாலை விட 1 லட்சத்து 29 ஆயிரம் வாக்குகள் அதிகமாக பெற்று முன்னிலையில் உள்ளார். 

May 23, 2019
15:17 (IST)
வரும் 26-ம்தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார் பிரதமர் மோடி. 
May 23, 2019
15:15 (IST)
சட்டமன்ற இடைத்தேர்தல் நிலவரம்

திமுக 13 தொகுதிகளில் முன்னிலை
அதிமுக 9 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. 

May 23, 2019
15:13 (IST)
பெரும் பின்னடைவில் விஜயகாந்த் மைத்துனர்

கள்ளக் குறிச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் விஜயகாந்தின் மைத்துனரும், தேமுதிக வேட்பாளருமான சுதீஷ 2.5 லட்சம் வாக்குகள் பின்னடைவில் உள்ளார். இவர் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டார். திமுக வேட்பாளர் கவுதம சிகாமணி 4.64 லட்சம் வாக்குகளை தற்போது வரை பெற்றிருக்கிறார். 

May 23, 2019
15:11 (IST)
1.90 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தமிழிசை பின்னடைவு!!

தூத்துக்குடியில் தமிழிசை தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். அவர் 1,04,108 வாக்குகளையும், கனிமொழி 2,96,449 வாக்குகளையும் தற்போதுவரை  பெற்றுள்ளனர். 
May 23, 2019
15:09 (IST)
89 வாக்குகள் வித்தியாசத்தில் கிருஷ்ணசாமி பின்னடைவு!!

தென்காசியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதியதமிழகம் வேட்பாளர் கிருஷ்ணசாமி தற்போதைய நிலவரப்படி 89 வாக்குகள் பின்னடைவில் உள்ளார். 
May 23, 2019
15:07 (IST)
''இந்தியா மீண்டும் வெற்றி பெற்றது'' : மோடி

மக்களவை தேர்தலில் பாஜக 330-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். அவர் தனது ட்வீட் பதிவில், ''ஒன்றாக வளர்வோம், ஒன்றாக வளர்ச்சி பெறுவோம், ஒன்றிணைந்து வலிமை மிக்க இந்தியாவை உருவாக்குவோம். இந்தியா மீண்டும்வெற்றி பெற்றுள்ளது''  என்று கூறியுள்ளார். 
May 23, 2019
14:52 (IST)
பூந்தமல்லி இடைத் தேர்தல் 2 மணி நிலவரம்


கிருஷ்ணசாமி. (திமுக)- 34,423


வைத்தியநாதன் (அதிமுக)- 20,612

May 23, 2019
14:52 (IST)
பெரம்பூர் இடைத் தேர்தல் 2 மணி நிலவரம்


ஆர்.டி.சேகர் (திமுக)- 15,216


ஆர்.எஸ்.ராஜேஷ் (அதிமுக)- 5,803

May 23, 2019
14:52 (IST)
திருப்போரூர் இடைத் தேர்தல் 2 மணி நிலவரம்


இதயவர்மன் (திமுக)- 34,156


ஆறுமுகம் (அதிமுக)- 22,515

May 23, 2019
14:51 (IST)
சோழிங்கர் இடைத் தேர்தல் 2 மணி நிலவரம்


சம்பத்து (அதிமுக)- 59,426


அசோகன் (திமுக)- 48,944

May 23, 2019
14:51 (IST)
குடியாத்தம் இடைத் தேர்தல் 2 மணி நிலவரம்


காத்தவராயன் (திமுக)- 86,853


மூர்த்தி (அதிமுக)- 64,102

May 23, 2019
14:51 (IST)
ஆம்பூர் இடைத் தேர்தல் 2 மணி நிலவரம்


வில்வநாதன் (திமுக)- 81,119


ஜோதிராமலிங்கராஜா (அதிமுக)- 44,069

May 23, 2019
14:51 (IST)
ஓசூர் இடைத் தேர்தல் 2 மணி நிலவரம்


ஜோதி (அதிமுக)- 50,652


சத்யா (திமுக)- 43,764

May 23, 2019
14:50 (IST)
பாப்பிரெட்டிப்பட்டி இடைத் தேர்தல் 2 மணி நிலவரம்


கோவிந்தசாமி (அதிமுக) - 34,172


மணி. (திமுக)- 18,479

May 23, 2019
14:50 (IST)
ஹாரூர் இடைத் தேர்தல் 2 மணி நிலவரம்

சம்பத்குமார் (அதிமுக)- 28,250


கிருஷ்ணகுமார் (திமுக) - 24,057

May 23, 2019
14:50 (IST)
நிலக்கோட்டை இடைத் தேர்தல் 2 மணி நிலவரம்


தேன்மொழி (அதிமுக)- 39,517


சவுந்திரபாண்டியன் (திமுக)- 34,967

May 23, 2019
14:50 (IST)
திருவாரூர் இடைத் தேர்தல் 2 மணி நிலவரம்


பூண்டிகலைவாணன் (திமுக)- 41,404


ஜீவநாதம் (அதிமுக)- 18,901

May 23, 2019
14:49 (IST)
அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி தொடர்ந்து முன்னிலை!
May 23, 2019
14:47 (IST)
தஞ்சாவூர் இடைத் தேர்தல் 2 மணி நிலவரம்


டி.கே.ஜி.நீலமேகம் (திமுக)- 33,387


ஆர்.காந்தி (அதிமுக)- 24,059

May 23, 2019
14:47 (IST)
மானாமதுரை இடைத் தேர்தல் 2 மணி நிலவரம்


நாகராஜன் (அதிமுக)- 39,906


காசிலிங்கம் (திமுக)- 30,157

May 23, 2019
14:46 (IST)
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தல் 2 மணி நிலவரம்


மகாராஜன் (திமுக)- 22,445


லோகிராஜன் (அதிமுக)- 22,327

May 23, 2019
14:45 (IST)
பெரியகுளம் இடைத் தேர்தல் 2 மணி நிலவரம்


சரவணக்குமார் (திமுக)- 22,482


மயில்வேல் (அதிமுக)- 16,062

May 23, 2019
14:45 (IST)
சாத்தூர் இடைத் தேர்தல் 2 மணி நிலவரம்


ராஜவர்மன் (அதிமுக)- 38,503


ஸ்ரீநிவாசன் (திமுக)- 33,131

May 23, 2019
14:43 (IST)
பரமக்குடி 2 மணி நிலவரம்


சம்பத்குமார் (திமுக)- 10,806


சாதன்பிரபாகரன் (அதிமுக)- 10,149

May 23, 2019
14:42 (IST)
விலாத்திக்குளம் 2 மணி நிலவரம்


சின்னப்பன் (அதிமுக)- 47,632


ஜெயக்குமார் (திமுக)- 25,902

May 23, 2019
14:42 (IST)
சூலூர் 2 மணி நிலவரம்

கந்தசாமி (அதிமுக)- 38,221 

பொங்கலூர் பழனிசாமி (திமுக)- 35,073
May 23, 2019
14:41 (IST)

சரவணன் (திமுக)- 39,243 

முனியாண்டி (அதிமுக)- 37,089
May 23, 2019
14:40 (IST)
அரவக்குறிச்சி 2 மணி நிலவரம்:

செந்தில் பாலாஜி (திமுக)- 21,896 

செந்தில்நாதன் (அதிமுக)- 15,089
May 23, 2019
14:39 (IST)
இடைத் தேர்தலிலும் முந்தும் திமுக!

22 சட்டமன்ற இடைத்தேர்தலைப் பொறுத்தவரை, மொத்தமாக திமுக 13 இடங்களிலும், அதிமுக 9 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன


May 23, 2019
14:33 (IST)
அன்புமணி ராமதாஸ் பின்னடைவு!

தர்மபுரி மக்களவை தொகுதியில் அன்புமணி ராமதாஸ் 2,00,143 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் செந்தில் குமார் 2, 19,352 வாக்குகள் பெற்றிருக்கிறார். 

May 23, 2019
14:30 (IST)
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னிலை!!

ராஜசத்யன் (அதிமுக) - 82,363 வாக்குகள்
வெங்கடேசன் (மா. கம்யூ) - 1,17,833 வாக்குகள்

May 23, 2019
14:26 (IST)
கரூரில் தம்பிதுரை பின்னடைவு!!

காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி  - 2,73,896 வாக்குகள்
அதிமுக வேட்பாளர் தம்பிதுரை - 1,10,807 வாக்குகள்
வாக்கு வித்தியாசம் சுமார் 1 லட்சத்து 62 ஆயிரம் வாக்குகள். 


May 23, 2019
14:22 (IST)
'சாதித்துவிட்டார் மோடி' : ரஜினிகாந்த்

மக்களவை தேர்தலில் பாஜக முன்னிலை பெற்று வரும் நிலையில் பிரதமர் மோடிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து கூறியுள்ளார். மோடிக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள் என்று கூறியுள்ள ரஜினிகாந்த் மக்களவை தேர்தலில் மோடி சாதித்து விட்டார் என்றும் கூறியுள்ளார். 

May 23, 2019
14:21 (IST)
கோவையில் பாஜக பின்னடைவு!!

கோவையில் பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் 1,46,517 வாக்குகளையும், அவரை எதிர்த்து போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர். நடராஜன் 2,07,261 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

 
May 23, 2019
14:13 (IST)
ஆ. ராசா 1.80 லட்சம் வாக்குகள் முன்னிலை!!

நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா தற்போதுவரை பெற்றுள்ள வாக்குகள் 4,92,578
அதிமுக வேட்பாளர் தியாகராஜன் பெற்றுள்ள வாக்குகள் 3,08,746

May 23, 2019
14:06 (IST)
77 ஆயிரம் வாக்குகள் பின்னடைவில் கிருஷ்ணசாமி!

அதிமுக கூட்டணி புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமி 2,45,170 வாக்குகளும், திமுக வேட்பாளர் தனுஷ் குமார் 3,22,702 வாக்குகளும் தற்போது வரை பெற்றுள்ளனர். 

May 23, 2019
14:03 (IST)
3000 வாக்குகள் பின்னடைவில் திருமா!!

சிதம்பரம் தொகுதியில் தற்போது வரை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 1,09,003  வாக்குகளையும் அவரை எதிர்த்து அதிமுக தரப்பில் போட்டியிடும் சந்திரசேகர் 1,12,425 வாக்குகளையும் பெற்றுள்ளனர். 

May 23, 2019
14:01 (IST)
 வாக்குகளை அள்ளும் பாரிவேந்தர்!!

பெரம்பலூர் மக்களவை தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் அதன் தலைவர் பாரிவேந்தர் போட்டியிட்டார். அவர் தற்போது வரையில் 4,76,286 வாக்குகளை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து அதிமுக தரப்பில் போட்டியிடும் சிவபதி 1,98,173 வாக்குகளை பெற்றுள்ளார். வாக்கு வித்தியாசம் சுமார் 2.79 லட்சம். 

May 23, 2019
13:57 (IST)
ஜெயக்குமார் மகன் பின்னடைவு!

தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழக அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் பின்னடைவு. ஜெயவர்தன் பெற்றுள்ள வாக்குகள் 92,583. அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன் 1,62,086 வாக்குகளை பெற்றிருக்கிறார். 

May 23, 2019
13:52 (IST)
1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் எச்.ராஜா பின்னடைவு!

சிவகங்கை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பாக கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். அவர் தற்போது வரை 1,73,256 வாக்குகளை பெற்றுள்ளார். பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா பெற்ற வாக்குகள் 71,777 வாக்குகள். 

May 23, 2019
13:47 (IST)
1.49 லட்சம் வாக்குகள் வித்யாசத்தில் தமிழிசை பின்னடைவு!!

தூத்துக்குடி தொகுதியின் தற்போதைய நிலவரம் : திமுக வேட்பாளர் கனிமொழி பெற்ற வாக்குகள் 2,36,032. அதிமுக கூட்டணியின் பாஜக வேட்பாளர் தமிழிசை பெற்றுள்ள வாக்குகள் 87,343

May 23, 2019
13:43 (IST)
தேனியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பின்னடைவு!

தேனி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தற்போது வரை 82,647 வாக்குகளை பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளரும், துணை முதல்வர் ஓபிஎஸ்-ன் மகன் ஓ.பி. ரவிந்திரநாத் 1,01,891 வாக்குகளை பெற்றிருக்கிறார்.

 

May 23, 2019
13:38 (IST)
ராமநாதபுரத்தில் பாஜக பின்னடைவு!

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜக தரப்பில் நயினார் நாகேந்திரனும், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தரப்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். தற்போதைய நிலவரப்படி நயினார் நாகேந்திரன் 39 ஆயிரம் வாக்குகள் பின்னடைவில் உள்ளார். 

May 23, 2019
13:35 (IST)
புதுவையில் வெற்றியை நோக்கி காங்.!

வைத்திலிங்கம் (காங்.)- 1,81,398

நாராயணசாமி கேசவன் (என்.ஆர்.காங்.)- 93,496

May 23, 2019
13:32 (IST)
விஜயகாந்த் மைத்துனர் பெரும் பின்னடைவு!!

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக கள்ளக்குறிச்சியில் போட்டியிடுகிறது. இதில் விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே. சுதீஷ் வேட்பாளராக போட்டியிடுகிறார். தற்போதைய நிலரப்படி அவர் 1,55,514 வாக்குகளை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து களத்தில நிற்கும் திமுக வேட்பாளர் கவுதமசிகாமணி 3,56,095 வாக்குகள் பெற்றுள்ளார். 

May 23, 2019
13:27 (IST)
அன்புமணிக்கு செம டஃப் கொடுக்கும் திமுக வேட்பாளர்!

தர்மபுரியில் பாமக வேட்பாளர் அன்புமணிக்கு திமுக வேட்பாளர் செல்வ குமார் தொடர்ந்து டஃப் கொடுத்து வருகிறார். ஒவ்வொரு ரவுண்டு முடிவிலும் சுமார் 2 ஆயிரம் வாக்குகள் முன்னிலை மற்றும் பின்னடைவை இந்த இரு வேட்பாளர்களும் சந்தித்து வருகின்றனர். தற்போது 1700 வாக்குகள் வித்தியாசத்தில் செல்வகுமார் முன்னணியில் இருக்கிறார். 

May 23, 2019
13:22 (IST)
கரூரில் ஒரு லட்சத்து 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி முன்னிலை. 82,720 வாக்குகள் மட்டுமே பெற்று அதிமுக மூத்த தலைவர் தம்பி துரை பின்னடைவு. 

May 23, 2019
13:16 (IST)
சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 22 தொகுதிகளில் 14-ல் முன்னிலை வகிக்கிறது. 
May 23, 2019
13:14 (IST)
சிதம்பரம் மக்களவை தொகுதியில் 2700 வாக்குகள் வித்தியாசத்தில் திருமா வளவன் பின்னடைவு.
May 23, 2019
13:12 (IST)
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவு. 
May 23, 2019
13:08 (IST)
May 23, 2019
13:05 (IST)
வெற்றிக் கொண்டாட்டத்தை திமுக தொடங்கியுள்ளது. பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் தொண்டர்கள் உற்சாகம்
May 23, 2019
13:04 (IST)
திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கே.ஜெயக்குமார் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை. 
May 23, 2019
13:04 (IST)
3-ல் மட்டுமே அதிமுக கூட்டணி டாப்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 
தேனி, தர்மபுரி, சிதம்பரம் தொகுதிகளில் 
மட்டுமே அதிமுக தலைமையிலான 
கூட்டணி முன்னிலையில் உள்ளது!
May 23, 2019
13:01 (IST)
திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கே.ஜெயக்குமார் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை. 
May 23, 2019
12:57 (IST)
தர்மபுரி மக்களவை தொகுதியில் 3300 வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் முன்னிலை.
May 23, 2019
12:56 (IST)
அரவக்குறிச்சியில் பரபரப்பு

காலை 11:30 மணி நிலவரப்படி, 22 சட்டமன்றத் தேர்தலில் 12-ல் திமுகவும், 9-ல் அதிமுக-வும் முன்னிலை வகித்து வந்தன. ஆனால் அரவக்குறிச்சித் தொகுதியில் மட்டும் வாக்கு எண்ணிக்கை குறித்து எந்த வித தகவலும் சுமார் 12:30 மணி வரை தெரிவிக்கப்படவில்லை. இந்த தாமதத்துக்கு என்ன காரணம் என்பதும் தெரியவில்லை.

முதல் சுற்று முடிவில் செந்தில் பாலாஜி, 5,102 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். செந்தில்நாதன், 3,911 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
May 23, 2019
12:55 (IST)
மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 1 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார். 
May 23, 2019
12:50 (IST)

கரூரில் தோல்வியை நோக்கி தம்பிதுரை!


ஜோதிமணி (காங்.)- 1,46,801


தம்பிதுரை (அதிமுக)- 58,995

May 23, 2019
12:47 (IST)
நீலகிரியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
May 23, 2019
12:44 (IST)
சட்டமன்ற இடைத்தேர்தல் நிலவரம் : திமுக 13. அதிமுக 9 தொகுதிகளில் முன்னிலை
May 23, 2019
12:43 (IST)
பெரம்பலூர் நிலவரம் : திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் 3,08,484 வாக்குகள் பெற்றுள்ளார். வாக்கு சதவீதம் 62.8. அதிமுகவின் சிவபதி 1,30,345 வாக்குகள் பெற்றுள்ளார். வாக்கு சதவீதம் 25.53.
May 23, 2019
12:39 (IST)
கள்ளக் குறிச்சியில் தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் (விஜயகாந்தின் மைத்துனர்) 1.30 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார். 
May 23, 2019
12:37 (IST)
இடைத்தேர்தல் முன்னணி நிலவரம் - திமுக 12, அதிமுக 10
May 23, 2019
12:35 (IST)
அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
May 23, 2019
12:33 (IST)
கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கைகொடுக்கும் தமிழகம்? - தேசிய அளவில் 5 இடங்களில் மட்டுமே கம்யூனிஸ்ட் கட்சிகள் முன்னிலை. இவற்றில் 4 தொகுதிகள் தமிழகத்தில் உள்ளன. 
May 23, 2019
12:30 (IST)
தேசிய அளவில் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ள கட்சிகள்
1. பாஜக
2. காங்கிரஸ்
3. திரிணாமூல் காங்கிரஸ்
4. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்.
5. திமுக. 
May 23, 2019
12:29 (IST)
தேசிய அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் 5 இடங்களில் முன்னிலை. அவற்றில் 4 தொகுதிகள் தமிழகத்தில் உள்ளன. 
May 23, 2019
12:27 (IST)
2100 வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் முன்னிலைக்கு வந்தார் தர்மபுரி பாமக வேட்பாளர் அன்புமணி
May 23, 2019
12:26 (IST)
தூத்துக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு
May 23, 2019
12:23 (IST)
தர்மபுரி, சிதம்பரம், தேனியில் மட்டும் அதிமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. மற்ற அனைத்திலும் திமுக கூட்டணி முன்னிலை. 
May 23, 2019
12:21 (IST)
37 மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. 
May 23, 2019
12:20 (IST)
முன்னிலை பெற்ற தொகுதிகளை பொறுத்தளவில் அகில இந்திய அளவில் திமுக 5-வது இடத்தில் உள்ளது. 
May 23, 2019
12:15 (IST)
நீலகிரி மக்களவை தொகுதியில் ஆ.ராசா 98 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். 
May 23, 2019
12:08 (IST)
தர்மபுரியில் அன்புமணி ராமதாஸ் சுமார் 250 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு
May 23, 2019
12:03 (IST)
தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். 
May 23, 2019
12:02 (IST)
சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 11, அதிமுக 11 இடங்களில் முன்னிலை
May 23, 2019
12:01 (IST)
சிவகங்கையில் பாஜக வேட்பாளர் எச். ராஜா 53 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு
May 23, 2019
11:59 (IST)
திருவள்ளூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கே. ஜெயக்குமார்  45 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
May 23, 2019
11:58 (IST)
மத்திய சென்னை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
May 23, 2019
11:55 (IST)
ஆலோசனையில் ரஜினிகாந்த்

தமிழக தேர்தல் நிலவரம் குறித்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ராஜு மகாலிங்கத்துடன் ரஜினிகாந்த் ஆலோசனை
May 23, 2019
11:54 (IST)
தஞ்சை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.எஸ். பழனி மாணிக்கம், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் நடராஜனை விட 75 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை
May 23, 2019
11:49 (IST)
அரூர் - இடைத்தேர்தல்

சம்பத் குமார் (அதிமுக)- 11,240

கிருஷ்ணகுமார் (திமுக) - 6,740
May 23, 2019
11:49 (IST)
பாப்பிரெட்டிப்பட்டி - இடைத்தேர்தல்

கோவிந்தசாமி (அதிமுக) - 10,714

மணி.ஏ (திமுக)- 7,166
May 23, 2019
11:47 (IST)
ஓசூர் இடைத்தேர்தல்

ஜோதி (அதிமுக)- 20,843

சத்யா (திமுக)- 18,703
May 23, 2019
11:46 (IST)
சுமார் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தூத்துக்குடியில் தமிழிசை பின்னடைவு. கனிமொழி - 115671, தமிழிசை - 40374
May 23, 2019
11:44 (IST)
கன்னியாகுமரி தொகுதியில் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை விட காங்கிரஸ் வேட்பாளர் எச். வசந்த குமார் முன்னிலை
May 23, 2019
11:44 (IST)
கன்னியாகுமரி தொகுதியில் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை விட காங்கிரஸ் வேட்பாளர் எச். வசந்த குமார் முன்னிலை
May 23, 2019
11:42 (IST)
தர்மபுரியில் பாமக வேட்பாளர் அன்புமணி 5700 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
May 23, 2019
11:41 (IST)
தேனி தொகுதியில் ஓ.பி.எஸ். மகன் ரவிந்திரநாத் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். 
May 23, 2019
11:39 (IST)
சிதம்பரத்தில் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் பின்னடைவு
May 23, 2019
11:38 (IST)
இடைத்தேர்தல் நிலவரம் காலை 11.30
குடியாத்தம்
காத்தவராயன் (திமுக)- 29,731
மூர்த்தி (அதிமுக)- 22,345
May 23, 2019
11:38 (IST)
இடைத்தேர்தல் நிலவரம் காலை 11.30
சோழிங்கர் 
அசோகன் (திமுக)- 26,597
சம்பத் (அதிமுக)- 25,762
May 23, 2019
11:37 (IST)
சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நிலவரம் காலை 11.30
திருப்போரூர்  
இதயவர்மன் (திமுக)- 15,194
ஆறுமுகம் (அதிமுக)- 10,205
May 23, 2019
11:36 (IST)
காலை 11.30 மணி நிலவரம் :
பெரம்பூர் (சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் )
ஆர்.டி.சேகர் (திமுக)- 15,216
ஆர்.எஸ்.ராஜேஷ் (அதிமுக)- 5,803
May 23, 2019
11:35 (IST)
காலை 11.30 மணி நிலவரம் :
பூந்தமல்லி (சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் )
கிருஷ்ணசாமி.ஏ (திமுக)- 9,820
வைத்தியநாதன் (அதிமுக)- 7,224
May 23, 2019
11:32 (IST)
30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கிருஷ்ணசாமி பின்னடைவு : தென்காசி மக்களவை தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி தலைவர் பின்னடைவு. இவர் அதிமுக கூட்டணியில் உள்ளார்.
May 23, 2019
11:30 (IST)
தமிழகம் புதுவையில் திமுக கூட்டணி 37 மக்களவை தொகுதிகளில் முன்னணியில் உள்ளது.
May 23, 2019
11:29 (IST)
சிதம்பரம் மக்களவை தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 3500 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு
May 23, 2019
11:26 (IST)
மதுரையில் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் அதிமுக வேட்பாளர் ராஜ சத்தியனை விட 7 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை
May 23, 2019
11:24 (IST)
கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை விட சுமார் 58 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார். 
May 23, 2019
11:17 (IST)
அரக்கோணத்தில் திமுக வேட்பாளர் ஜெகத் ரட்சகன் 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
May 23, 2019
11:01 (IST)
சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக 12 இடங்களிலும் அதிமுக 10 இடங்களிலும் முன்னிலை
May 23, 2019
10:56 (IST)
தமிழகத்தில் போட்டியிட்ட 5 தொகுதியிலும் பாஜக பின்னடைவு
May 23, 2019
10:55 (IST)
கோவையில் பாஜகவுக்கு பின்னடைவு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் நடராஜன், பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை விட 10 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை
May 23, 2019
10:46 (IST)
தேனியில் ஓ.பி.எஸ். மகன் ரவிந்திரநாத் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். 
May 23, 2019
10:41 (IST)
சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக 11 இடங்களிலும், அதிமுக 10 இடங்களிலும் முன்னிலை
May 23, 2019
10:38 (IST)
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் சுமார் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு
May 23, 2019
10:37 (IST)
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் தமிழிசை சவுந்தர ராஜன் 38 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு.
May 23, 2019
10:35 (IST)
மத்திய சென்னையில் தயாநிதி மாறன் 21,243 வாக்குகள். பாமகவின் சாம் பால் 5,946
May 23, 2019
10:33 (IST)
கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் தொடர்ந்து பின்னடைவை சந்திக்கிறார்.