This Article is From Jun 01, 2019

விருப்பமுள்ளவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம், "திணிக்கக் கூடாது": கமல்ஹாசன்

விருப்பமுள்ளவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம், "திணிக்கக் கூடாது" என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

விருப்பமுள்ளவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம்,

புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில், நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி, இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. அதன்படி,  மூன்றாவது மொழித்தேர்வு என்பது மாநிலங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும், மாநிலத்தின் தாய்மொழியைப் பொறுத்து மூன்றாவது மொழி அமைய வேண்டும் என்றும் வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. 

இதைத்தொடர்ந்து, இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைத்துரைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறும்போது, எந்த மொழியையும் திணிக்கக் கூடாது என்றும் விருப்பமுள்ளவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் என்றார்.

தொடர்ந்து, தமிழகத்திற்கு மத்திய அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படாதது குறித்து எழுப்பிய கேள்விக்கு, மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு வாய்ப்பே இல்லை என்பதைத்தான் பார்க்க முடிகிறது. வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்பதாக தெரியவில்லை. தமிழக மக்கள் குரல் அந்த சபையில் ஒலிக்க வேண்டும் என்பது தான் அனைவரின் கோரிக்கை.

அடுத்த மத்திய அமைச்சரவை பட்டியலில் தமிழகத்திற்கு இடம் கிடைக்கும் என தமிழக அமைச்சர் மாபா.பாண்டியராஜன் கூறியிருப்பது தேர்தல் வாக்குறுதி போல் தான் பார்க்க வேண்டும். பிரதமர் மோடியின் ஆட்சி நன்றாக இருக்க வேண்டும் என்பதே ஒரு இந்தியனாக நான் ஆசைப்படுவது என்று அவர் கூறினார்.

.