குளத்தூரில் காதல் திருமணம் செய்த தம்பதியர் வெட்டிக் கொலை

அதிகாலை 3 மணிக்கு மர்ம கும்பல் அரிவாள்களுடன் அங்கு வந்தது. வீட்டின் முன் படுத்து தூங்கிக் கொண்டிருந்த கணவன்- மனைவி இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
குளத்தூரில் காதல் திருமணம் செய்த தம்பதியர் வெட்டிக் கொலை

விசாரணை நடைபெற்று வருகிறது.


Thoothukudi: 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் சமத்துவபுரம் பெரியார்நகரை சேர்ந்தவர்  சோலைராஜ் (வயது 23) பரையர் சமூகத்தை சேர்ந்தவர்.  விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி பல்லாகுளத்தை சேர்ந்த ஜோதி (21) பள்ளர் சமூகத்தை சேர்ந்தவர். இருவரும் உப்பளத்தில்  வேலை பார்த்துள்ளனர் அப்போது இருவருக்குக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இருவர் வீட்டிலும் எதிர்ப்பு வந்துள்ளது.

இதையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்பு பெரியார் நகரில் புதுமண ஜோடிகள் தனியாக வசித்து வந்தனர். திருமணத்திற்கு பின் சோலைராஜ் மட்டும் கூலிவேலைக்கு சென்று வந்தார். ஜோதி வீட்டில் இருந்து வந்தார்.

 இரவு கணவன்- மனைவி இருவரும் காற்றுக்காக வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கினர். இந்நிலையில் அதிகாலை 3 மணிக்கு மர்ம கும்பல் அரிவாள்களுடன் அங்கு வந்தது. வீட்டின் முன் படுத்து தூங்கிக் கொண்டிருந்த கணவன்- மனைவி இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.சம்பவ இடத்திலேயே இருவரும் இறந்தனர். பெண் கர்ப்பமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சந்தேகத்தின் அடிப்படை யில் பெண்ணின் அப்பா கைது செய்யப்பட்டுள்ளார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................