தமிழகத்தில் ஒரே நாளில் 5,776 பேருக்கு கொரோனா! 89 பேர் பலி!!

சென்னையில் இன்று 949 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 5,776 பேருக்கு கொரோனா! 89 பேர் பலி!!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,776 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று 80,503 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 5,783 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,69,256 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 89 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,925 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் 4,10,116 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 

Newsbeep

சென்னையைப் பொறுத்தவரையில்  இன்று 955 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,42,603 ஆக அதிகரித்துள்ளது. 16 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.  11,145 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரையில் 52,98,508  பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதன்முறையாக 50 லட்சத்திற்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில் 5,930 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மொத்தம் 51,215 பேர் சிகிச்சையில் உள்ளனர்.