This Article is From Jul 09, 2020

விசாரணை என்கிற பெயரில் போனில் நள்ளிரவில் அத்துமீறிய காவல் ஆய்வாளருக்கு கட்டாய ஓய்வு!

முன்னதாக இவர் மீது பல புகார்கள் இருந்ததால் திருச்சி பொன்மலையிலிருந்து, பெரம்பலூருக்கு மாற்றப்பட்டார் என மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். என கடந்தகால குற்றச்சாட்டுகளையும் ஆராய்ந்த பின்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணை என்கிற பெயரில் போனில் நள்ளிரவில் அத்துமீறிய காவல் ஆய்வாளருக்கு கட்டாய ஓய்வு!

மற்றொரு குற்றச்சாட்டின் பேரில் காவல்துறை அதிகாரி முன்னர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டார்

Tamil Nadu:

சமீபத்தில் சாத்தான்குளத்தில் தந்தை மகன் இருவர் காவல்துறையின் பாதுகாப்பில் இருந்த போது உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை சார்ந்த ஆய்வாளர், உட்பட பலரை சி.பி.சி.ஐ.டி அதிரடியாக கைது செய்தது. இந்த சம்பவத்தினை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் மீதான புகார்கள் வெளிவந்துள்ளன.

தற்போது பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஒரு காவல்துறை அதிகாரி, விசாரணைக்காக நள்ளிரவில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு போன் செய்து துன்புறுத்தியதற்காக கட்டாய ஒய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

48 வயதான காவல்துறை ஆய்வாளர், ஒரு பெண் புகார்தாரரை நள்ளிரவில் தொலைபேசியில் விசாரித்ததற்காக அழைத்ததாகவும், தேவையற்ற விஷயங்களை பேசியதாகவும் எங்களுக்கு ஒரு புகார் வந்தது. எங்கள் விசாரணையின் போது, ​​குற்றச்சாட்டு உண்மை என்று நாங்கள் கண்டறிந்தோம்" என்று ஒரு உயர் போலீஸ் அதிகாரி கூறியுள்ளார். மேலும், 1997 –ம் ஆண்டு பேட்சை சேர்ந்த இவருக்கு கட்டாய ஓய்வுக்கான உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

.