This Article is From Apr 20, 2019

4 தொகுதி இடைத்தேர்தலுக்கு ஆயத்தமாகும் அதிமுக! - நாளை முதல் விருப்ப மனுக்கள் விநியோகம்!!

விருப்ப மனு பெறுவோர் ரூ. 25 ஆயிரத்தை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்று அதிமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

4 தொகுதி இடைத்தேர்தலுக்கு ஆயத்தமாகும் அதிமுக! - நாளை முதல் விருப்ப மனுக்கள் விநியோகம்!!

4 தொகுதி இடைத் தேர்தல் தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Chennai:

தமிழகத்தில் காலியகா உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளில் மே 19-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை எதிர்கொள்ள ஆளும் அதிமுக ஆயத்தமாகியுள்ளது. கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை நாளை முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் வேட்பு மனு விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் தற்போது வேலூரை தவிர்த்து மீதம் உள்ள 38 மக்களவை தொகுதிகளிலும், 18 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடத்தப்பட்டது. மேலும் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19-ம்தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சூலூர் அதிமுக எம்.எல்.ஏ. கனகராஜ் நெஞ்சுவலியால் கடந்த மாதம் காலமானார். ஒட்டப்பிடாரம் அதிமுக எம்.எல்.ஏ. சுந்தர ராஜ் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பரங்குன்றம் அதிமுக எம்.எல்.எ. ஏ.கே. போஸ் கடந்த ஆண்டு காலமானார். இதேபோன்று மற்றொரு அதிமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி திமுகவுக்கு தாவியதால் தகுதி நீக்கம் ஆனார். 

இந்த காரணங்களுக்காக இந்த 4 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. வேலூர் மக்களவை தொகுதிக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என்கிற விவரம் வெளியாகவில்லை. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.