This Article is From Aug 27, 2019

காஞ்சிபுரம் கோயில் குளத்தில் வெடித்த மர்மப் பொருள்- ஒருவர் பலி; 5 பேர் காயம்!

வெடி விபத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து பாம்ப் ஸ்குவாடு ஆராய்ந்து வருகிறது. 

காஞ்சிபுரம் கோயில் குளத்தில் வெடித்த மர்மப் பொருள்- ஒருவர் பலி; 5 பேர் காயம்!

இந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். 5 பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது (கோப்புப் படம்)

Chennai:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் மானாம்பதி கோயிலில் உள்ள குளத்தில் மர்மப் பொருள் ஒன்று வெடித்துள்ளது. இந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். 5 பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் 6 லஷ்கர்-இ-தய்பா தீவிரவாத அமைப்பின் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அதற்கும் இதற்கும் தொடர்பில்லை என்று போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது. 

வெடி விபத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து பாம்ப் ஸ்குவாடு ஆராய்ந்து வருகிறது. 

“மானாம்பதி கோயிலுக்கு அருகே இருந்த குளம் தூர்வாரப்பட்டுள்ளது. அப்போது மர்மப் பொருள் ஒன்றை தூர்வாரும் பணியில் ஈருபட்டிருந்தவர்கள் கண்டறிந்துள்ளனர். அதை அவர்கள் திறக்க முயற்சி செய்யும்போதுதான் வெடி விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் கே.சூர்யா என்ற வாலிபர் உயிரிழந்துள்ளார். 5 பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது” என்று காவல் துறை சம்பவம் குறித்து விளக்கமாக தெரிவித்துள்ளது. 

“வெடி விபத்து குறித்து முதலில் கேள்விப்பட்டபோது நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தோம். ஆனால், அதற்கும் தற்போது விடுக்கப்பட்டிருக்கும் உளவுத் துறை எச்சரிக்கைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை விசாரணையில் தெரிந்து கொண்டோம். விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்ற்னர்” என்று மேலும் கூறியுள்ளது போலீஸ் தரப்பு. 

.