ஸ்லோமோஷனில் ஒரு லவ் : சோம்பேறி மிருகத்தின் காதல் புகைப்படம்…!

“இது ஒரு ஸ்லோமோஷன் லவ்” என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவர் “அழகான பதிவு! ஸ்லாத்துக்கு மின்னல் என்று பெயர்… ஹா ஹா” என்று கமெண்ட் செய்துள்ளார்.

ஸ்லோமோஷனில் ஒரு லவ் : சோம்பேறி மிருகத்தின் காதல் புகைப்படம்…!

ஃபேஸ்புக் பதிவில் இரண்டு ஸ்லாத்தும் விஷயங்களை மிக மெதுவாக எடுத்து செல்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தனர்

அமெரிக்காவின் சின்சினாட்டி மிருகக்காட்சி சாலையில் மிகவும் சோம்பேறி மிருகமான ஸ்லாத் மிருகங்கள் இரண்டுக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. அதற்கான புகைப்படத்தை மிருகக்காட்சி சாலை தன் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 

இரண்டு ஸ்லாத்தும் மரத்தில் தலைகீழாக தொங்கியபடி மூக்கோடு மூக்கு உரசிக் கொண்டிருக்கின்றன. ஃபேஸ்புக் பதிவில் இரண்டு ஸ்லாத்தும் விஷயங்களை மிக மெதுவாக எடுத்து செல்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தனர். ‘மோ' என்ற ஆண் ஸ்லாத்துக்கு ‘லைட்னிங்' என்ற பெயர் கொண்ட 7 வயது பெண்  ஸ்லாத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். 

ஆண் ஸ்லாத்தான ‘மோ' லைட்னிங்குடன் இணைவதற்கு முன்பு டிஸ்கவரி ஃபாரஸ்ட் சோலோவை இரண்டு நாள்கள் தனியாக சுற்றி வந்தது. தற்போது இரண்டும் இரண்டு வாரங்களாக  இணைந்து வாழ்கின்றன.

வியாழக்கிழமை ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டதிலிருந்து 16,000க்கும் மேற்பட்ட ‘லைக்கினை' பெற்றுள்ளது. 2,000க்கும் மேற்பட்டோர் கமெண்டுகளை செய்துள்ளனர். 

“இது ஒரு ஸ்லோமோஷன் லவ்” என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவர் “அழகான பதிவு! ஸ்லாத்துக்கு மின்னல் என்று பெயர்… ஹா ஹா” என்று கமெண்ட் செய்துள்ளார். 

Click for more trending news


More News