This Article is From Aug 11, 2019

நட்சத்திர ஹோட்டலில் ரூ.12 லட்சம் பில் தொகையை செலுத்தாமல் நைசாக தப்பிய நபர்!

ஹோட்டலில் உள்ள சொகுசு அறையில் 102 நாட்களாக ஒருவர் தங்கியுள்ளார். இதற்கான மொத்த கட்டணம் ரூ.25.96 லட்சம் ஆகும். இதில், ரூ.13.62 லட்சத்தை மட்டும் செலுத்திய அந்த நபர் மீதமுள்ள தொகையை செலுத்தாமல், யாருக்கும் தெரியாமல் அறையை காலி செய்து சென்றுள்ளார். 

நட்சத்திர ஹோட்டலில் ரூ.12 லட்சம் பில் தொகையை செலுத்தாமல் நைசாக தப்பிய நபர்!

தாஜ் பஞ்சாரா ஹோட்டலில் உள்ள சொகுசு அறையில் அந்த நபர் 102 நாட்கள் தங்கியுள்ளார்.

Hyderabad:

ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் 100 நாட்களுக்கு மேலாக தங்கிய நபர் ஒருவர், ஹோட்டல் அறைக்கு கொடுக்க வேண்டிய ரூ.12.34 லட்சத்தை செலுத்தாமல் நைசாக தப்பிச் சென்றுள்ளார்.

இதுகுறித்து தாஜ் பன்ஜாரா ஹோட்டல் நிர்வாகம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது. புகாரின் பேரில் விசாகப்பட்டினத்தை சேர்ந்த தொழிலதிபர் சங்கர் நாராயன் என்பவர் மீது மோசடி, கிரிமினல் குற்றம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ஹோட்டல் நிர்வாக தரப்பில் கூறும்போது, அவர்களது ஹோட்டலில் உள்ள சொகுசு அறையில் 102 நாட்களாக ஒருவர் தங்கியுள்ளார். இதற்கான மொத்த கட்டணம் ரூ.25.96 லட்சம் ஆகும். இதில், ரூ.13.62 லட்சத்தை மட்டும் செலுத்திய அந்த நபர் மீதமுள்ள தொகையை செலுத்தாமல், யாருக்கும் தெரியாமல் அறையை காலி செய்து சென்றுள்ளார். 

இதையடுத்து, ஹோட்டல் நிர்வாகம் தரப்பில் அந்த நபரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது அவர் பாக்கி தொகையை செலுத்திவிடுவதாக உறுதியளித்துள்ளார். எனினும், அந்த நபர் பின்னர் தனது செல்போனை ஸ்வீட் ஆப் செய்து வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து, அந்த மோசடி நபர் குறித்து ஹோட்டல் நிர்வாகம் பாஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. 

இதுகுறித்து உதவி ஆய்வாளர் ரவி கூறும்போது, ஹோட்டல் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் அந்த மோசடி நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, விசாரணையையும் தொடங்கியுள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தொழிலதிபரான நாராயன் கூறும்போது, அனைத்து தொகையையும் செலுத்தி விட்ட பின்னரே நான் அறையை காலி செய்தேன். எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக ஹோட்டல் நிர்வாகம் என் மீது வீண் பழி சுமத்துகிறது என்று கூறிய அவர், ஹோட்டலுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.