This Article is From Mar 16, 2019

"மசூத் அஸார் கணக்குகளை முடக்குகிறோம்" சுஷ்மாவிடம் பேசிய ஃப்ரான்ஸ் அமைச்சர்!

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஸாரின் சொத்துக்களை முடக்குவது குறித்து ஃப்ரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் லீ டிரையன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் பேசினார். 

அமெரிக்கா, இங்கிலாந்து, ஃப்ரான்ஸ் ஆகிய நாடுகள் ஐநாவில் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க கோரியுள்ளன.

ஃப்ரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் லீ டிரையன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஸாரின் சொத்துக்களை முடக்குவது குறித்து பேசினார். 

புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற மசூத் அஸாருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளதாக பாரிஸில் முடிவெடுக்கப்பட்டதையும் அவர் சுஷ்மாவிடம் தெரிவித்தார்.

சீனா, மசூத் அஸாரை சர்வதேச தீவிரவாதி என ஐநாவில் தீர்மாணம் கொண்டு வந்த பிறகு, ஃப்ராண்ஸும் கணக்குகளை முடக்குவதாக கூறி இந்தியாவுக்கு ஆதரவு அளித்துள்ளது.

ஃப்ரான்ஸ் வெளியுறவுத்துறை இதனை ஐரோப்பிய யூனியனிலும் முன்வைத்துள்ளதாக சுஷ்மாவிடம்  கூறினார்.

ஃப்ரான்ஸ் எப்போதும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவு தருவதாக கூறினார்.

இதற்கு சுஷ்மா நன்றி தெரிவித்துள்ளார். தீவிரவாத எதிர்ப்பில் தொடர்ந்து இந்தியவுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கக்கூடாது என்பதில் இரு நாடுகளும் ஒரே மனநிலையில் இருப்பதாக கூறினார்.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஃப்ரான்ஸ் ஆகிய நாடுகள் ஐநாவில் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க கோரியுள்ளன.

.