This Article is From Nov 20, 2018

2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை: சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு

தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சியே முடிவு செய்யும். எனினும் தனிப்பட்ட முறையில் நான் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்

2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை: சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு

2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

New Delhi:

2019 நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என பாஜக மூத்த அரசியல் தலைவரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய பிரதேசத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சியே முடிவு செய்யும். எனினும் தனிப்பட்ட முறையில் நான் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளேன். இதுகுறித்து கட்சிக்கும் தகவல் அளித்துள்ளேன் என்றார்.

மக்களவை எம்.பி.யான சுஷ்மா சுவராஜ், நீண்ட காலமாக நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருந்தது குறித்து அவரது தொகுதியில் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டிருந்தது. இதுதொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் எழுப்பிய கேள்வியின் போதே சுஷ்மா தன் முடிவை தெரிவித்தார்.

இதுகுறித்து பாஜக வட்டாரங்கள் கூறும்போது, மாநிலங்களவை மூலம் மீண்டும் சுஷ்மாவை நாடாளுமன்றத்திற்குள் பங்கேற்க முடிவு செய்துள்ளதாக தகவல் அளித்துள்ளனர்.

மேலும், சுஷ்மாவின் குடும்ப உறுப்பினர்கள் கூறும்போது, நோய் தொற்றை தடுக்கும் வகையில் அவருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். இதுவரை சுஷ்மா 11 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். அவரது இந்த முடிவிற்கு பின்னால் எந்த அரசியல் காரணங்களும் இல்லையெனத் தெரிகிறது.

சுஷ்மா சுவராஜ், கடந்த 2016 ஆம் ஆண்டில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். சர்க்கரை வியாதி காரணமாக சில மாதங்களுக்கு மருத்துவர்களால் ஒய்வில் இருக்க வலியுறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

.