’சுஷ்மா என் தாய் போன்றவர்’- பாக்., சிறையிலிருந்து மீண்ட மும்பை இளைஞர் உருக்கம்!

Sushma Swaraj death: பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டிருந்த மும்பையைச் சேர்ந்த ஹமிது நேஹல் அன்சாரி, கடந்த டிசம்பவர் மாதம் சுஷ்மா சுவராஜ் நடவடிக்கையால் விடுவிக்கப்பட்டார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
’சுஷ்மா என் தாய் போன்றவர்’- பாக்., சிறையிலிருந்து மீண்ட மும்பை இளைஞர் உருக்கம்!

சுஷ்மா மறைவு எனக்கு பெரும் இழப்பு என ஹமிது நேஹல் தெரிவித்துள்ளார்.


Mumbai: 

மும்பையைச் சேர்ந்த பொறியாளர் ஹமிது நேஹல் அன்சாரி, 6 வருடங்களாக பாகிஸ்தானில் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த நிலையில் சுஷ்மா சுவராஜின் உதவியால், அண்மையில் விடுவிக்கப்பட்டார். 

முன்னாள் வெளியுரவுத்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா, பல்வேறு காரணங்களுக்காக சீமிப காலங்களில் மிகவும் விரும்பப்பட்ட அரசியல் தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார்.

இவர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு திடீரென உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் அவரது கட்சி தலைவர்கள், தொண்டர்ளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

o1os8lqo

டெல்லியில் உள்ள சுஷ்மா சுவராஜ் உடலுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதேபோல், பேஸ்புக், ட்வீட்டர் போன்ற சமூகவலைதளங்களிலும் பலரும் இரங்கல் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர். 

அந்தவகையில், மும்பையைச் சேர்ந்தவர் ஹமிது நேஹல் அன்சாரி என்பவர், சுஷ்மாவின் மறைவு எனது தாயை இழந்தது போன்று என்று கூறியுள்ளார். 
 

0s8nr9bg

ஹமிது நேஹல் தன் சமூக வலைத்தள தோழியை சந்திக்க முடிவு செய்து, ஆப்கானிஸ்தான் வழியாக 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்றார். அங்கு உளவு பிரிவு போலீசார், 2012-ம் ஆண்டில் ஹமிதை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, அவர் 6 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் இருந்தார்.

இதையடுத்து, அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மாவின் தீவிர நடவடிக்கையால் ஹமிது அன்சாரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா திரும்பினார். 

இந்நிலையில் சுஷ்மாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஹமிது, சுஷ்மா தன் தாயைப் போன்றவர் எனத் தெரிவித்துள்ளார். மேலும், நான் ஆழ்ந்த இரங்கலை அவருக்கு தெரிவித்துக்கொள்கிறேன். அவர் என்றுமே என் இதயத்தில் வாழ்ந்துகொண்டே இருப்பார். அவர் என் தாயைப் போன்றவர். அவர் இல்லாதது எனக்கு மிகப்பெரிய இழப்பு என்று கூறியுள்ளார்.

(With inputs from ANI)சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................