கொலைகாரர்களை பாகிஸ்தான் கவுரவம் செய்கிறது- ஐ.நா.-வில் சுஷ்மா பேச்சு

தீவிரவாதமும், பருவ நிலை மாற்றமும்தான் இந்த உலகத்திற்கு தற்போதுள்ள சவால்கள். ஐ.நா. சபை ஒரு குடும்பத்தை போன்று செயல்பட வேண்டும் என்றும் சுஷ்மா பேசினார்.

ஐ.நா.-வில் சுஷ்மா சுவராஜ் பேசிய காட்சி.

New York:

மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஐ.நா. பொது சபையில் இன்று பேசியதாவது -

பாகிஸ்தானில் தீவிரவாதி ஹபீஸ் சயீது சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்.
இதனால் பாகிஸ்தான் மீது எங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. இந்த சூழலில் எங்களால் எவ்வாறு பேச்சுவார்த்தை நடத்த முடியும்?.

முன்பு பேச்சுவார்த்தையின் முக்கியத்துவம் கருதி அதனை நாங்கள்தான் துவக்கினோம். அதனை தனது சொந்த நடவடிக்கையால் பாகிஸ்தான் தடுத்து நிறுத்தி விட்டது. கொலைகாரர்களை பாகிஸ்தான் கவுரவம் செய்கிறது. அப்பாவிகள் ரத்தம் சிந்துவதை அந்நாடு ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. தீவிரவாதத்தை ஊக்கப்படுத்துவது பாகிஸ்தான்.

ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்ததும் பாகிஸ்தான் தான். தீவிரவாதமும், பருவ நிலை மாற்றமும்தான் இந்த உலகத்திற்கு தற்போதுள்ள சவால்கள். ஐ.நா. சபை ஒரு குடும்பத்தை போன்று செயல்பட வேண்டும். முடிவு எடுக்கும் நடவடிக்கைகளில் ஐ.நா. சபை மகாத்மா காந்தியின் அகிம்சையை பின்பற்ற வேண்டும். இவ்வாறு சுஷ்மா பேசினார்.

More News