"என்னோட ஜோ தான் என்னோட ஜாக்பாட்" மனம் திறந்த சூர்யா!

ஜோதிகாவுக்கு இந்தப்படம் சரியான படம். சில ஆக்‌ஷன் காட்சிகளைப் பார்த்து எப்படி இதையெல்லாம் செய்திருப்பார் என்று ஆச்சர்யப்பட்டேன்.

 Share
EMAIL
PRINT
COMMENTS

ஹைலைட்ஸ்

  1. ஜாக்பாட் படத்தில் ஜோதிகா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்
  2. மன்சூர் அலிகான் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
  3. ரசிகர்கள் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யும் என படக்கு நம்பிக்கை

ஜோதிகா, ரேவதி கூட்டணியில் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஜாக்பாட்'. கதைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்தெடுத்து நடித்து வரும் ஜோதிகா, ராட்சசி படத்தைத் தொடர்ந்து 'ஜாக்பாட்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்கநர், தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு உரையாற்றினர். இதில் சூர்யா கலந்துகொண்ட இப்படம் பற்றி பேசினார். 

நடிகர் சூர்யா பேசியதாவது,

"இன்றைய ஹீரோ விசால் சந்திரசேகர். என்னோட ஜோ தான் என்னோட ஜாக்பாட். 100 சதவிகிதம் 200 சதவிகிதம் எந்த காம்ப்ரமேஸும் இல்லாமல் சரியாச் செய்ற அம்மா ஜோதிகா. அவர் தேர்ந்தெடுக்கிற படங்கள் எல்லாவற்றையும் மிகவும் யோசித்து யோசித்து தான் செய்வார். தமிழ்நாட்டுப் பெண்கள் ஒவ்வொருவரும் அவர்களைப் பற்றி, சமூகத்தைப் பற்றி மிகச் சரியான மதிப்பீட்டை வைத்திருப்பார்கள். ஜோதிகாவுக்கு இந்தப்படம் சரியான படம். சில ஆக்‌ஷன் காட்சிகளைப் பார்த்து எப்படி இதையெல்லாம் செய்திருப்பார் என்று ஆச்சர்யப்பட்டேன். ஆறுமாதம் சிலம்பம் கத்துக்கிட்டார். மீண்டும் நான் ஜோதிகாவிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்" என்றார்

இயக்குநர் கல்யாண் பேசியதாவது,

"எனக்கு பெரிய ஜாக்பாட் என்னன்னா 2D எண்டெர்டெயின்மெண்ட் தான். நான் ராஜா சாரிடம் போய் மூன்று சீன் தான் சொன்னேன். உடனே செக் கொடுத்துட்டார். பிறகு ஜோதிகா மேடத்திடம் கதையைச் சொன்னேன். அவர் உடனே சூட்டிங் போகலாம் என்றார்.

ஸ்பாட்டில் சூர்யா தான் ஜோதிகாவுக்குள் வந்துவிட்டாரோ என்று நினைக்கும் அளவிற்கு பிரமாதமாகப் பண்ணி இருக்கிறார். படத்தில் ஜோதிகா பாதி சூர்யாவாகவும் பாதி ஜோதிகாவாகவும் தெரிவார். விஷால் சந்திரசேகர் ஒரு நல்ல இசை அமைப்பாளர் பவர்புல்லான இசை அமைப்பாளர் எங்களுக்கு கிடைத்திருக்கிறார்" என்றார்சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................