உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழிலும் வெளிவர வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த முடிவினை வரவேற்பதாகவும், இந்திய நீதிபரிபாலனச் சரித்திரத்தில் முக்கிய மைல் கல் என்று தெரிவித்துள்ளார். தமிழ் மொழியையும் அந்த பட்டியிலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழிலும் வெளிவர வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை

ஆங்கிலம் இல்லாமல் இந்தி, தெலுங்கு, அசாமி, கன்னடா, ஒடியா ஆகிய 5 மொழிகளிலும் தீர்ப்பு வெளியாகும்.


Chennai: 

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் வெளியிடப்படும் என்ற உச்சநீதிமன்ற அறிவிப்பில் தமிழ் இல்லாததற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். அந்தப் பட்டியலில் தமிழை சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்துள்ளார். 

உலகமெங்கும் உள்ள நாடுகளில் முதன்மை நீதிமன்றத்தில் ஆங்கிலம் அல்லது தங்களின் தாய்மொழியிலேயே தீர்ப்பு வழங்கப்படும். முதல் முறையாக இந்திய உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் ஆங்கிலம் அல்லாமல் பிற ஐந்து மொழிகளில் வெளியிடவுள்ளதாகத் தகவல்கள் வெளியானது. ஆங்கிலம் இல்லாமல் இந்தி, தெலுங்கு, அசாமி, கன்னடா, ஒடியா ஆகிய 5 மொழிகளிலும் தீர்ப்பு வெளியாகும். 

உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் புதிதாக மாற்றப்பட்டுள்ளது. அந்த தளத்திலே இனி தீர்ப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது. இந்நிலையில்  5 மொழிகளில்  தமிழ் இல்லாததற்குத் திமுக தலைவர் ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த முடிவினை வரவேற்பதாகவும், இந்திய நீதிபரிபாலனச்  சரித்திரத்தில் முக்கிய மைல் கல் என்று தெரிவித்துள்ளார்.  தமிழ் மொழியையும் அந்த பட்டியிலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)


சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................