This Article is From Nov 02, 2018

நீதிமன்ற உத்தரவுகள் இந்தி மொழியில் கிடைக்க உச்ச நீதிமன்றம் நடவடிக்கை

உச்ச நீதிமன்றம் மற்றும் மற்ற நீதிமன்றங்களின் முக்கிய தீர்ப்புகள் இந்தி மொழியில் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்

நீதிமன்ற உத்தரவுகள் இந்தி  மொழியில் கிடைக்க உச்ச நீதிமன்றம் நடவடிக்கை

முதலில் இந்தி மொழியிலும் பின்னர் மாநில மொழிகளும் தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்படவுள்ளன.

New Delhi:

உச்ச நீதிமன்றம் மற்றும் மற்ற நீதிமன்றங்களின் முக்கிய உத்தரவுகள் இந்தி மொழியில் மொழி பெயர்க்கப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5-ம் தேதி முதல் ஒரு வார கால விடுமுறை உச்ச நீதிமன்றத்திற்கு அளிக்கப்படவுள்ளது. இதையொட்டி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூட்டம் ஒன்றில் பேசினார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது-

நீதிமன்ற முக்கிய தீர்ப்புகளை இந்தி மொழியில் மொழி பெயர்க்க திட்டமிட்டுள்ளோம். இருப்பினும், சம்பந்தப்பட்ட நீதிபதியின் ஒப்புதலுக்கு பின்னரே மொழிபெயர்ப்பு பிரதி வெளியிடப்படும்.

இதனை அமைப்பதற்காக வல்லுனர் குழு ஒன்று ஏற்படுத்தப்படும். அவர்கள் மொழி பெயர்ப்பு பணிகளை மேற்கொள்வார்கள். சட்டத்துறையில் நல்ல அனுபவம் பெற்றவர்கள் இந்த குழுவில் இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

.